சச்சினுக்கே தலைவர்னா! சகல உலகத்துக்கும் தலைவர் ரஜினிதான்: மகாலிங்கத்தின் யம்மாடியோவ் விளக்கம். 

 
Published : Feb 19, 2018, 05:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
சச்சினுக்கே தலைவர்னா! சகல உலகத்துக்கும் தலைவர் ரஜினிதான்: மகாலிங்கத்தின் யம்மாடியோவ் விளக்கம். 

சுருக்கம்

Lyca Productions Raju Mahalingam explain about rajinikanth and sachin thendulkar relationship

கட்சி ஆரம்பித்தால் மட்டும் போதாது! கட்சியை கரைசேர்க்க நல்ல கொ.ப.செ. தேவை! அதாவது, திறமையான கொள்கை பரப்புச் செயலாளர் அமைய வேண்டும். ரஜினி ஆரம்பிக்கப் போகும் கட்சிக்கு எந்தளவுக்கு அருமையான கொள்கை பரப்பு செயலாளர்கள் அமையப்போகிறார்களோ தெரியவில்லை. ஆனால் பர்ஷனலாக ரஜினிக்கு பக்காவான கொ.ப.செ. அமைந்துவிட்டார்! என்று அகமகிழ்கிறது போயஸ் வட்டாரம். ஒரு நல்ல தலைவனாக ரஜினியை மீடியா முன்னிலையில் அடையாளப்படுத்திக் கொண்டே இருக்க இவர் நிச்சயம் உதவுவார்! என்கிறார்கள். 

அப்படி ரஜினியின் உறவுகளால் விரல் நீட்டப்படும் கொ.ப.செ. யார் தெரியுமா? ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மகாலிங்கம் தான் அவர். 

ரஜினியை பற்றி சிலாகிக்கும் மகாலிங்கம்...”ரஜினி சாரை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், பாலிவுட்டின் டான் ஆன ஷாரூக்கான் என எல்லாருமே ‘தலைவர்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். அரசியலில் யார் யாரெல்லாமோ தலைவர் என்று அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் உண்மையிலேயே அந்த சொல்லுக்கு உரிய வடிவமாக திகழ்பவர் ரஜினிதான். உலகமே அவரை தலைவராக ஏற்றுக் கொண்டதாகவே நான் கருதுகிறேன். 

சக மனிதர்களை எந்த தடையுமின்றி, எல்லையுமின்றி அணுகி அன்பு காட்டுபவர். தன்னோடு பழகுபவர்கள் மீது எந்தளவுக்கு அன்பு காட்டுபவர் அவர் என்பதை நேரில் அனுபவித்து உணர்ந்தவன் நான். தமிழகத்தில் சிஸ்டத்தை மாற்ற வேண்டும்! என்று அவர் கூறியிருப்பது சாதாரண வாக்கியமில்லை. திறமைசாலி இளைஞர்கள் தமிழகத்தில் எக்கச்சக்கம். அவர்களின் யோசனைகளுடன் நிச்சயம் இங்கே சிஸ்டத்தை சரி செய்வார் தலைவர்.
அவரை தமிழக முதல்வர் பதவியில் அமர வைப்பது மட்டுமே என் லட்சியம்” என்று சிலிர்த்திருக்கிறார் மகாலிங்கம். 

மகாலிங்கம் வாக்கு நிறைவேறுமா? என்று கவனிப்போம். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!