’பாத்ரூம் போனால்கூட சந்தேகப்படுகிறார்...’ மோடியால் இணைந்த நமோ காதலி கதறல்..!

Published : Feb 04, 2019, 02:33 PM IST
’பாத்ரூம் போனால்கூட சந்தேகப்படுகிறார்...’ மோடியால் இணைந்த நமோ காதலி கதறல்..!

சுருக்கம்

பிரதமர் மோடிக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து காதல் ஜோடியாகி திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒரே மாதத்தில் பிரிந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பிரதமர் மோடிக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து காதல் ஜோடியாகி திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒரே மாதத்தில் பிரிந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

குஜராத்தை சேர்ந்த ஜே தேவ் என்கிற இளைஞர் ராகுல்காந்தியின் பேஸ்புக் பக்கத்தில் மோடிக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டார்.  அதற்கு அல்பிகா என்கிற பெண் லைக் போட்டார். இதனையடுத்து ஒருவருக்கொருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு காதலாகி கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து ’’நமோ டிசர்ட்டுடன் போஸ் கொடுத்து ''நாங்கள் பேசினோம். சந்தித்தோம். நாங்கள் இருவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் இந்தியாவில் வசிக்க விரும்புகிறோம். அதனால் நாங்கள் இணைந்து வாழ முடிவு செய்துள்ளோம்'' என்று தெரிவித்து இணையத்தில் பதிவிட்டனர். இதப்பதிவு ட்ரெண்ட் ஆனது. பிரதமர் மோடியை டேக் செய்தும் இருந்தார் ஜேதாவ்.

இந்த ஜோடியை பாஜகவினர் மெச்சி வந்த நிலையில், ஒரே மாதத்தில் கருத்து வேறுபாட்டால் ஜே தாவை விட்டு பிரிந்துள்ளார் அல்பிதா. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். அதில் அல்பிகா பதிவிட்டுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அதில், ‘’ நான் உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் தற்கொலைக்கு கூட முயன்றேன். எனக்கு வீட்டுக்குள்ளே சுதந்திரம் இல்லை. எனக்கு 18 வயதாகிறது. அவருக்கு 29 வயது. ஆனாலும் அதையெல்லாம் சகித்து கொண்டேன்.

 

முதலில் அவர் தனது பப்ளிசிட்டிக்காக எனது அனுமதி இல்லாமல் எனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.  என்னுடைய விஸ்வாசம் தொடர்ந்து சோதனைக்குட்படுகிறது. நான் பாத்ரூம் போனால்கூட அங்கு என்ன செய்தாய் என பல முறை சந்தேகப்படுகிறார். எனது செல்போனில் நான் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தேவிடம் காட்டி வருகிறேன். எனது சுய விருப்பத்தை அவர் மதிப்பதில்லை’’ என அவர் தெரிவித்துள்ளார்.  என்று தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு மின் ஜேதாவை பிரிந்த அல்பிகா தற்போது தனது பெற்றோடுடன் வசித்து வருகிறார். அவரது மற்றொரு பதிவில், இந்த நிகழ்வால் நான் பிரதமர் மோடியை அவமானப்படுத்தவோ, குற்றம்சாட்டவோ விரும்பவில்லை. அவரை எனது தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த சூழலிலும் குற்றம்சாட்ட மாட்டேன். நான் எப்போதும் மோடியின் மிகப்பெரிய ரசிகை. அவரது பெயரை எனது பப்ளிசிட்டிக்காக பயன்படுத்த மாட்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார். 
 
அல்பிகாவின் ட்விட்டை கடந்து செல்லும் நெட்டிசன்கள், ’’நமோ காதல் ஜோடியினரின் கல்யாணம் ஒரே மாதத்தில் நமத்து காதலை கசக்க வைத்து விட்டதே என கமெண்ட்களை தட்டி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?
விஜய்யை சீண்டாதீங்க.. பாஜகவினருக்கு டெல்லி கொடுத்த 'சைலண்ட்' வார்னிங்.. மாஸ்டர் பிளான்!