உதவிகரம் நீட்டும் பாஜக... கபசுர குடிநீர்- உணவு வழங்கி தினந்தோறும் உதவி..!

Published : Apr 24, 2020, 02:03 PM ISTUpdated : Apr 28, 2020, 02:28 PM IST
உதவிகரம் நீட்டும் பாஜக... கபசுர குடிநீர்- உணவு வழங்கி தினந்தோறும் உதவி..!

சுருக்கம்

பாஜக பிரமுகர்கள் பலரும் தங்களது வீட்டில்  உணவு தயாரித்து ஏழி எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றனர். சுப்ரமணிய பிரசாத், தன் வீட்டுக்கு பின்னால் சமைத்த சுத்தமான உணவு வகைகளை வழங்குவதோடு கபசுர குடிநீரையும் வழங்கி வருகிறார். 

வெள்ள நிவாரணம், கொரோனா உதவி என்ற பெயரில், அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் தங்களால் இயன்ற நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பாஜகவை சேர்ந்தவர்கள் ஏழை எளிய மக்களின் வீடு தேடி சென்று உதவிகளை வழங்கி வருகின்றனர். 

கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் வகையில் ஒருசிலர், தேவையான பொருள் அல்லது உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.  தெருவில் தினமும் பணி செய்யக்கூடிய தூய்மைப் பணியாளர்களுக்கு ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீர் கொடுக்கப்படுகிறது. அவருக்கு மட்டுமல்ல ஊர் மக்கள், ஊர்க்காவல் படையினர், காவல்துறையினர் என்று அனைவருக்குமே அன்றைக்கு கபசுரகக் குடிநீர் வழங்குகிறார் சுப்ரமணிய பிரசாத். 

அவரது பகுதியில் ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு 15 கிலோ அரிசி ஒரு கிலோ துவரம்பருப்பு மேலும் பல்வேறு குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மளிகைப் பொருட்கள் காய்கறிகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கிறார். இதுவரை பல ஆயிரத்துக்கு மேற்பட்ட உணவு பொட்டலங்களைன்மோடிகிச்சன் நிர்வாகிகள் மூலமாக உணவு தேவைப்படக்கூடிய மக்களுக்கு உனக்கு அளித்துள்ளார். 

அவரது வீட்டுக்கு தினமும் ஏறத்தாழ 40 முதல் 50 சேவை மனப்பான்மை கொண்ட கட்சி நிர்வாகிகள் நண்பர்கள் வருகின்றனர். முழுமையான பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி அவர்களுடன் சேர்ந்து சமையல் செய்து உணவுகளை விநியோகம் செய்து வருகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!