கஜானாவை நிரப்ப நல்ல வழிகளைப் பாருங்கள்... டாஸ்மாக் விவகாரத்தில் அதிமுகவுக்கு அலெர்ட் கொடுக்கும் ரஜினி..!

By vinoth kumarFirst Published May 10, 2020, 11:08 AM IST
Highlights

டாஸ்மாக் கடைகளை மறுபடியும் திறந்தால் மீண்டும் ஆட்சி கனவை மறந்துவிட வேண்டும் என அதிமுக  அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.  

டாஸ்மாக் கடைகளை மறுபடியும் திறந்தால் மீண்டும் ஆட்சி கனவை மறந்துவிட வேண்டும் என அதிமுக  அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.  

தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது.  இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அதிமுக சுட்டணி கட்சியினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால், எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் முடிவில் முதல்வர் திட்டவட்டமாக இருந்தார். 

ஆனால், பாமக, மக்கள் நீதி மய்யம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஊரடங்கு உள்ளபோது மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை என கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அதிடியாக உத்தரவிட்டது. பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இது எடப்பாடி அரசு மீது பெரும் விமர்சனங்களை எழுப்பி வருகிறது. 

இந்நிலையில், டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிடுள்ள அவர், ``இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்’’ என்று கூறியிருக்கிறார்.

click me!