7 கட்டங்களாக ஏப்ரல்- மே மாதங்களில் மக்களவை தேர்தல்... இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Mar 10, 2019, 5:38 PM IST
Highlights

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-  மே மாதங்களில்  7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-  மே மாதங்களில்  7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

வரும் ஜூன், 3ஆம் தேதியுடன், தற்போதைய மக்களவை உறுப்பினர்களில் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து 17 வது மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. டெல்லியில் உள்ள விக்யான் பவனில் செய்தியாளர்கள் முன்னிலையில், இந்திய தேர்தல் ஆணையர்களான சுனில் அரோரா, அசோக் லவாசா சுஷில் ஆகியோர் அறிவித்தனர். அதன்படி ‘’ வரும் மே மாதம் தேதி நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத்தேர்தல்  ஏப்ரல் 11, இரண்டாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 18 , மூன்றாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 23 , 4 கட்ட தேர்தல் ஏப்ரல்- 29, 5 கட்ட தேர்தல் மே- 6ம் தேதியும்  7ம் கட்டத்தேர்தல் கட்ட தேர்தல்  மே-12 ம் தேதியும் நடைபெற உள்ளது.  வேட்பு மனு தாக்கல் மார்ச் 18 ம்தேதி தொடங்குகிறது.

கட்சி நாள் வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படும். 23 மாநிலங்களி 100 சதவிகிதம் வாக்காளர் பட்டியல் சரியாக இருக்கிறது.

மொத்தம் இந்தியாவில் 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்கத் தகுதியானவர்களாக உள்ளனர்.  இந்தத் தேர்தலில் 8.4 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் எனத் தெரிந்து கொள்ள முடியும். 18 முதல் 19 வயது வரை 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.  இரவு  10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பொலிபெருக்கி வைக்கக்கூடாது. தேர்தலை அமைதியாக நடத்த மத்திய ரிசர்வ் படையினர் குவிக்கப்பட உள்ளனர். அனைத்து கட்டத்திலும் தேர்தல் பார்வையாளர்கள் இருப்பார்கள்.  படிவம் 26 ஐ சமபிர்க்காதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆன்ட்ராய்டு செயலி மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் மாற்ற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கேட்க தனி ஆப் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  வாக்குசாவடிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புகார் அளிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும். பணம் தந்து செய்திகள் வெளியாவதை தடுக்க அனைத்து பகுதிகளும் கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் ஆதரவாக கருத்து தெரிவிப்பதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது.  

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து மத்திய அரசு, மேற்கொண்டு எந்தத் திட்டங்களையும் அறிவிக்க முடியாத சூழல் உருகி உள்ளது. 

மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் ---- நடத்தப்பட உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 9 லட்சமாக இருந்த வாக்குச்சாவடிகள் இந்தாண்டு 10 லட்சமாக உயர்ந்த்தப்பட்டுள்ளது. 

click me!