#BREAKING உள்ளாட்சித் தேர்தல் எப்போது? ஜூன் 26ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்..!

By vinoth kumarFirst Published Jun 24, 2021, 1:16 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் ஜூன் 26ம் தேதி நடைபெறுகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் ஜூன் 26ம் தேதி நடைபெறுகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில், விழுப்புரம், நெல்லை , தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்திற்கு நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது. மேலும் நாங்கள் மாநில அரசுக்கு 3 மாதம் அவகாசம் தருகிறோம். அதற்குள் 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தி முடித்து அறிவிப்புகளை வெளியிட்டு இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 26-06-2021 சனிக்கிழமை மாலை 5.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!