உச்சநீதிமன்றத்தில் திமுக... உயர்நீதிமன்றத்தில் விசிக... மாறி மாறி வழக்கு போடுவதால் அலறும் அதிமுக..!

Published : Dec 09, 2019, 04:37 PM IST
உச்சநீதிமன்றத்தில் திமுக... உயர்நீதிமன்றத்தில் விசிக... மாறி மாறி வழக்கு போடுவதால் அலறும் அதிமுக..!

சுருக்கம்

மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மறைமுகத்தேர்தல் கொண்டு வந்துள்ள தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை.

உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 27 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இன்று முதல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இன்று காலை உள்ளாட்சி தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், வார்டு வரையறை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கு நாளை மறுநாள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. 

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மறைமுகத்தேர்தல் கொண்டு வந்துள்ள தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை. மறைமுகத் தேர்தல் குறித்த அவசர சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். 

உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகளும் மாறி மாறி வழக்கு தொடுத்துள்ளதால்  உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!