உள்ளாட்சி தேர்தலை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் எதிர்கட்சிகள்... தேர்தலுக்கு மு.க.ஸ்டாலின் வைக்கும் செக்..!

By vinoth kumarFirst Published Dec 9, 2019, 11:16 AM IST
Highlights

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 27 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் இதற்கு தடை கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 27 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, நேற்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து நீதிமன்றத்தை நாடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும்,  வார்டு வரையறை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து, திமுக தரப்பின் கோரிக்கை ஏற்ற உச்சநீதிமன்றம், நாளை மறுநாள் விசாரணை செய்வதாக அறிவித்துள்ளது. 

click me!