கர்நாடகா இடைத் தேர்தல் முடிவுகள் !! பட்டையைக் கிளப்பும் பாஜக!!

Published : Dec 09, 2019, 08:39 AM ISTUpdated : Dec 09, 2019, 09:55 AM IST
கர்நாடகா இடைத் தேர்தல் முடிவுகள் !! பட்டையைக் கிளப்பும் பாஜக!!

சுருக்கம்

கர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக 7 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

கர்நாடகத்தில் மதசார் பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து . 17 எம்.எல். ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து  சபாநாயகர் உத்தரவிட்டார். இதன் காரணமாக மத சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது

இதையடுத்து எடியூரப்பா முதலமைச்சராப பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி கர்நாடகாவில்  15 சட்டசபை தொகுதிகளுக்கு  இடைத் தேர்தல் நடைபெற்றது.

இதில்  பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.  இதில், 7 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 

15 தொகுதிகளில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்கும். இல்லாவிட்டால் அங்கு தற்போதைய அரசு நீடிப்பதில் சிக்கல் ஏற்படும். 

ஆனால் பாஜக 7 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளதால் எடியூரப்பா ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார் என்றே தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்