குழப்பத்தில் இருந்த மு.க.ஸ்டாலின்... தெளிவுப்படுத்திய எஸ்.பி. வேலுமணி..!

By vinoth kumarFirst Published Nov 16, 2019, 3:59 PM IST
Highlights

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புதிய மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2018-ம் ஆண்டு புதிதாக மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளார். 

புதிய மாவட்டங்களுக்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விழுப்புரம், வேலூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களைப் பிரித்து கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அதிமுக அரசு புதிய மாவட்டங்களை திட்டமிட்டு பிரித்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புதிய மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2018-ம் ஆண்டு புதிதாக மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளார். 

புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் மாற்றம் தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகே மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றார். மேலும், அதிமுக அரசை குறைகூறும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது வருத்தமளிக்கிறது. விரைவில் மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

click me!