உள்ளாட்சி தேர்தல்... சற்றும் சளிக்காமல் மீண்டும் நீதிமன்றத்தின் படி ஏறிய திமுக..!

By vinoth kumarFirst Published Dec 27, 2019, 4:05 PM IST
Highlights

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்றும், 30-ம் தேதியும் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில், திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். 

உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்றும், 30-ம் தேதியும் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில், திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்து 5 நாட்களுக்கு பிறகே, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதுவரை வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதும், நேர்மையாக, நியாயமாக வாக்கு எண்ணிக்கை நடத்துவதும் மாநில தேர்தல் ஆணையத்தின் கடமை.

ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கான வாக்குகளும் ஒரே பெட்டியில் போடப்படுகிறது. அவற்றை தனித்தனியாக பிரித்து எண்ணும் போது, முறைகேடுகள் நடக்காதபடி, உள்ளாட்சி தேர்தல் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கும் அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையை அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும். திமுக கோரிக்கையின்படி, தேர்தல் ஆணையம், போலீஸ் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு 20-ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.

click me!