தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது மத்திய அரசு சான்று...!! உச்சகட்ட குஷியில் ஒபிஎஸ்..!!

Published : Dec 27, 2019, 01:58 PM IST
தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது  மத்திய அரசு சான்று...!!  உச்சகட்ட குஷியில் ஒபிஎஸ்..!!

சுருக்கம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அதில்  அதிமுக வேட்பாளர்களை பொது மக்கள் வெகுவாக ஆதரித்து வருகிறார்கள் என்றார்,

நாட்டிலேயே நிர்வாகத்திறனில்  தமிழகம் முதலிடம்  பிடிப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது   தமிழகத்தில் அதிமுக  நல்லாட்சி செய்து வருகிறது என்பதற்கான சான்று என தமிழக துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்  பெருமிதம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  

தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு, நாடு தழுவிய அளவில்,   நிர்வாகத்திறனில் சிறந்து விளங்கும் மாநிலங்களின்  பட்டியலை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது,  அதில், பல்வேறு அரசு திட்டங்கள்  மற்றும்  நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.  எனவும்  2வது இடத்தில் மஹாராஷ்டிராவும்   3வது இடத்தில் கர்நாடகாமும்  4வது இடத்தில் சத்தீஸ்கர், 5வது இடத்தில் ஆந்திரா, 6வது இடத்தில் குஜராத், 7 வது இடத்தில் ஹரியானா, 8 வது இடத்தில் கேரளா 9வது இடத்தில் மத்திய பிரதேச, 10வது இடத்தில் மேற்கு வங்கம், 11வது இடத்தில் தெலுங்கானா, 12வது இடத்தில் ராஜஸ்தான், 13வது இடத்தில் பஞ்சாப், 14வது இடத்தில் ஒடிசாவும், 15வது இடத்தில் பீஹார், 16வது இடத்தில் கோவா, 17 வது இடத்தில் உத்திர பிரதேஷம்,   18 வது இடத்தில் ஜார்க்கண்ட் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்,  

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அதில்  அதிமுக வேட்பாளர்களை பொது மக்கள் வெகுவாக ஆதரித்து வருகிறார்கள் என்றார்,   அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. அனைத்து துறைகளுக்கும் ஒட்டுமொத்தமாக பொது நிர்வாகத்தில் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தெரியவந்துள்ளது.    இதன் மூலம் தமிழகத்தில் அதிமுக அரசு நல்லாட்சி நடத்தி வருகிறது என்பது உறுதியாகியுள்ளது என அவர் கூறினார் 
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி