திமுகவுக்கு சம்மட்டி அடி கொடுத்த உச்சநீதிமன்றம்... ஸ்டாலினை காண்டாக்கும் அமைச்சர் சி.வி.சண்முகம்..!

By vinoth kumarFirst Published Dec 11, 2019, 3:02 PM IST
Highlights

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் திமுகவுக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. மேலும், 2011 மக்கள் தொகை அடிப்படையில் தான் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை அடிப்படையில் தான் தேர்தல் நடத்த வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு என்றார். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் திமுகவுக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததால் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மற்றும் காங்கிரஸ், மதிமுக, திருமாவளவன் மற்றும் இடதுசாரி கட்சிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதாடினார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மொத்தம் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, திமுக தரப்பில் ஆஜரான வழக்கிறஞர் அபிஷேக் சிங்வி புதிய மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு முறை உள்ளாட்சித் தேர்தலில் கடைபிடிக்கப்படவில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சுழற்சி முறையில் வழங்க வேண்டிய பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 1991 மக்கள் தொகை கணக்கீட்டை இப்போதும் பயன்படுத்துகின்றனர். தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலேயே இதை தெளிவாக கூறியுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.சிதம்பரம் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களால் மாவட்ட ஊராட்சி தலைவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யப்படாததால், உள்ளாட்சி பதவிகளின் எண்ணிக்கையை கூட மாநில தேர்தல் ஆணையத்தால் கூற முடியவில்லை என வாதாடினார்.

இதனிடையே, 2011 மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு தேர்தலை நடத்தினால் உங்களுக்கு சம்மதமா? என திமுக தரப்பிடம் தலைமை நீதிபதி பாப்டே கேள்வி எழுப்பினார். உள்ளாட்சி தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி நடத்த வேண்டும். ஊராட்சி பதவி உள்பட அனைத்து பதவிகளுக்கும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கின் விசாரணையை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உச்சநீதிமன்றத்தில் கூர்ந்து கவனித்து வந்தார். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் உள்ளாட்சி தேர்தல் வழக்கில் திமுகவுக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. மேலும், 2011 மக்கள் தொகை அடிப்படையில் தான் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை அடிப்படையில் தான் தேர்தல் நடத்த வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு என்றார். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

click me!