கமல்- ரஜினி கட்சியுடன் கூட்டணி..? டி.டி.வி.தினகரன் எடுத்த அதிரடி முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Dec 11, 2019, 1:30 PM IST
Highlights

அமமுகவுக்கு பொதுச்சின்னம் கொடுக்க மறுப்பது தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அமமுக அறிவிக்கப்பட்டதற்கான ஆணையை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து டி.டி.வி.தினகரன் வணங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக பதிவு செய்யப்பட்ட கட்சியான பின்னரும் பொதுச்சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது.

 

கமல், ரஜினி, டி.டி.வி.தினகரன் கூட்டணி என்பது பத்திரிகை செய்திகளில் தான் வருகிறது. இது தொடர்பாக யாரும் என்னிடம் பேசவில்லை’’என அவர் கூறினார்.

இந்நிலையில், அ.ம.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் பழனியப்பன் பேசுகையில், ‘கர்நாடகாவைச் சேர்ந்த புகழேந்தியை, கட்சித் தலைமையில் பரிந்துரை செய்து ஓசூர் சட்டமன்ற வேட்பாளர் ஆக்கினோம். ஓசூரில் ரூம் போட்டுப்படுத்துக் கொண்டு, மக்களைச் சந்திக்காமல் கெளரவமான வாக்குகள்கூட வாங்கவில்லை. அவர் ஒரு வாய்ச்சொல் வீரர். நாங்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை’என தெரிவித்தார்.

click me!