ஸ்டாலினா? ச்சான்சே இல்ல... மாம்ஸ் தான் CM... திருப்பூரில் மாஸ் காட்டிய மச்சான்!

 
Published : Jul 23, 2018, 04:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
ஸ்டாலினா? ச்சான்சே இல்ல...  மாம்ஸ் தான் CM... திருப்பூரில் மாஸ் காட்டிய மச்சான்!

சுருக்கம்

LK suthish said vijayakanth will be tamilnadus cm soon

வருகிற தேர்தலில் தேமுதிக தான் ஆட்சியமைக்கும், கேப்டன் தான் முதல்வர் ஆவார் என்றும் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் திருப்பூரில் தனது மாஸ் பேச்சால் தெறிக்கவிட்டுள்ளார்.

திருப்பூரில் தேமுதிகவின் திருப்பூர் வடக்கு, தெற்கு மாவட்ட செயல்வீரர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிகவின் துணை செயலாளர் சுதீஷ் கலந்துகொண்டு பேசினார்.

இதற்கு முன்னதாக  செய்தியாளர்களிடம் பேசிய எல்.கே.சுதீஷ், "தமிழக அரசு முழுவதுமாக பாஜக கட்டுப்பாட்டில் இருப்பதால் தமிழக அரசு ஒரு செயல்படாத நிலையிலேயே உள்ளது. இதனால் தமிழகத்தில் எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் உள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து, தேமுதிகவின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய சுதீஷ், "திமுகவின் செயல் தலைவர் கடந்த சில ஆண்டுகளாகவே கட்சியின் வருங்கால தலைவராகவும், முதல்வராகவும் நினைத்து வருகிறார். அவரால் எப்போதும் கட்சியின் தலைவராகவும் தமிழக முதல்வராகவும் ஆக முடியாது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கமாட்டார். வருகின்ற தேர்தலில் தேமுதிக தான் ஆட்சியமைக்கும், நம்ம தலைவர் கேப்டன் விஜயகாந்த் தான் தமிழகத்தின் முதல்வராக வருவார் என்று அதிரடியாகப் பேசினார். 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!