
ஆர்டர் செய்த பத்து நிமிடத்தில் மதுபானம் டோர் டெலிவரி செய்யும் சேவையை தனியார் நிறுவனத் தொடங்கியுள்ளது. இதனால் குடிமகன்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இன்னோவென்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது booozi என்ற இணையதளம் வாயிலாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெருநகரங்களில் காய்கறிகள் உணவு மருந்து உள்ளிட்ட பொருட்கள் ஆன்லைனில் மூலம் டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. கடைகளுக்கு சென்று காய்கறி பொருட்கள் வாங்க நேரம் இல்லாதவர்களை மையப்படுத்தி டோர் டெலிவரி செய்யும் சேவையில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில் குடிமகன்களின் நீண்ட நாளைய ஏக்கங்களில் ஒன்றான மதுபானங்களை டோர் டெலிவரி செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அதிக அளவில் உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறி மருந்து பொருட்களை பெற இந்த சேவை பெரிய அளவில் கைகொடுத்தது. அதேபோல் கொரோனா காலத்தில் மதுபானக்கடைகள் மூடப்பட்டதால் கடுமையாக குடிமகன்கள் பாதிக்கப்பட்டனர்.
உணவு மற்றும் மருந்துப் பொருட்களைப் போல மதுபானத்தையும் டோர் டெலிவரி செய்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என பலர் கருத்து கூறிவந்தனர். அதற்கான முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை, ஆனால் சமீபத்தில் கொல்கத்தா மாநிலம் மட்டும் ஆன்லைன் மூலம் மதுபானத்தை டெலிவரி செய்ய அனுமதி அளித்துள்ளது. ஆன்லைனில் மதுபானங்களை ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் டோர் டெலிவரி செய்யும் சேவை அங்கே சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இன்னோவேசன் டெக்னாலஜி என்ற நிறுவனம் Booozi என்ற சேவையை கொல்கத்தாவில் அரசின் அனுமதி பெற்று தொடங்கியுள்ளது.
அதாவது வெறும் பத்து நிமிடத்தில் மதுபானத்தை டெலிவரி செய்யும் திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒருவர் ஆர்டர் கொடுத்தவுடன் அருகில் உள்ள மதுபான கடைக்கு சென்று தேவையான மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு அடுத்த பத்து நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் சேவையை வழங்கப்பட்டு வருகிறது. தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குறைந்த செலவில் இந்த சேவை செய்யப்படுகிறது என அந்நிறுவனத்தின் சிஇஓ விவேகானந்த் பாலிஜே பள்ளி கூறியுள்ளார். பொது சேவைக்கு குடிமகன்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இத்திட்டத்தை பலர் எதிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சேவையை தமிழ்நாட்டிலும் கொண்டு வரலாமே என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.