விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி யை கைது செய்ய வேண்டும்..!! ஆக்ரோஷத்தில் துள்ளும் இந்து மக்கள் கட்சி..!!

Published : Sep 15, 2020, 10:17 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி யை  கைது செய்ய வேண்டும்..!! ஆக்ரோஷத்தில் துள்ளும் இந்து மக்கள் கட்சி..!!

சுருக்கம்

"தன்னாட்சி தமிழகம்" #UnitedStates of India # தன்னாட்சி நாள் செப்டம்பர் 13ஞாயிறு காலை 10 மணிக்கு ஜூம் முகவரியில் நடத்தினார். மேலும்  செப்15 செவ்வாய் கிழமை டுவிட்டர் பரப்புரை செய்கிறார் என்று சமூக வலையதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு துரை.ரவிக்குமார் மீது இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே நேரத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:- விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும்,"உதயசூரியன்" சின்னத்தில் வெற்றி பெற்ற விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு துரை. ரவிக்குமார் அவர்கள், இணையவழி கருத்தரங்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். 

அதில் "தன்னாட்சி தமிழகம்" #UnitedStates of India # தன்னாட்சி நாள் செப்டம்பர் 13ஞாயிறு காலை 10 மணிக்கு ஜூம் முகவரியில் நடத்தினார். மேலும் செப்15 செவ்வாய் கிழமை டுவிட்டர் பரப்புரை செய்கிறார் என்று சமூக வலையதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்திய அரசியல் சாசனப்படி சத்திய பிரமாணம் செய்து பதவியேற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இதுபோன்று பிரிவினையை தூண்டும் வகையில் "தன்னாட்சி தமிழகம்" என்றும் 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா" என்று பெயர் மாற்றம் செய்வது போல, கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுவது பிரிவினை எண்ணத்தை பொதுவெளியில் விதைக்கும் செயல் ஆகும். 

பாராளுமன்ற உறுப்பினர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு, ஜாதி மொழி ரீதியாக இது போன்ற பிரிவினையை தூண்டும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வரும் துரை.ரவிக்குமாரை மதுரை மாவட்ட இந்து மக்கள்கட்சியின் சார்பில் வண்மையாக கண்டிக்கிறோம். இந்திய குடியரசுத் தலைவர், பாரதப் பிரதமர், மக்களவை சபாநாயகர் ஆகியோர் இவர் (துரை.ரவிக்குமார்) மீது இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.பிரிவினைவாத தடைச் சட்டத்தின் கீழ் துரை.ரவிக்குமாரை கைது செய்ய வேண்டுகிறோம். என வலியுறுத்துகிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!