காலா படத்தை துவம்சம் செய்வோம்: சபதமெடுக்கும் சீமானின் ‘பிள்ளைகள்’

Asianet News Tamil  
Published : Feb 14, 2018, 11:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
காலா படத்தை துவம்சம் செய்வோம்: சபதமெடுக்கும் சீமானின் ‘பிள்ளைகள்’

சுருக்கம்

Lets grab the image of Kala Seemans children

ஒரு காலத்தில் ரஜினியின் படமென்றால் எந்த பஞ்சாயத்து, சர்ச்சைகளும் இல்லாமல் வெளியாகும். காரணம், எந்த சமூக பார்வையும் இல்லாமல் வெறுமனே ஆட்டம், சண்டை, காதல் என்று தட்டையான அம்சங்களுடன் அவரது படங்கள் வெளியாகும்.

ஆனால் பாபாவில் ‘சிகரெட் குடிக்காம, தண்ணியடிக்காம நடிங்க’ என்று பா.ம.க. டீம் அட்வைஸ, ரஜினி முறிக்க, வெடித்துக் கிளம்பியது சர்ச்சை. பாபா படத்தின் பொட்டியை தூக்கிக் கொண்டு பா.ம.க.வின் அதிரடிப்படை எஸ்கேப் ஆகுமளவுக்கு பஞ்சாயத்து பட்டையை கிளப்பியது.

அதன் பிறகு ரஜினியின் படங்களுக்கு ரிலீஸ் சமயத்தில் பெரிய சிக்கல்கள் வெடித்ததில்லை. படம் தோற்றால் மட்டும் ‘படம் பயங்கர ஃபிளாப், நஷ்ட ஈடு கொடுங்க!’ என்று குரல்கள் கேட்பது வழக்கமாகியது.

இந்நிலையில் விரைவில் வெளி வர இருக்கும் ரஜினியின் ‘காலா’ படத்துக்கு எதிராக சீமான் டீம் முஸ்டி முறுக்குவதாக தகவல்கள் கசிகின்றன.காரணம்? இருக்கிறதே...

அதாவது காலா படத்தின் இயக்குநர் ரஞ்சித்துக்கும், மாஜி இயக்குநர் பிளஸ் தற்கால அரசியல்வாதி சீமானுக்கும் இடையில் முட்டல் உருவானதும், அது பிற்பாடு பஞ்சாயத்து பேசப்பட்டதும் தெரிந்த சேதி. வெளிப்பார்வைக்கு அது அடங்கிவிட்டாலுங்கூட உள்ளுக்குள் பிரச்னை பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள்.

அதன் உச்சமாக, காலா படத்தில் ஒரு வில்லன் கேரக்டர் அப்படியே சீமானை இமிடேட் செய்வது போல் இருக்கிறது! என யாரோ ஒரு புண்ணியவான் கொளுத்திப் போட்டிருக்கிறார். விளைவு, கோக்குமாக்காக தெறிக்கிறது கோலிவுட்.

இது சீமானின் டீமின் காதுகளையும் எட்ட, கொதித்துப் போய்விட்டார்களாம். சீமான் இதில் டென்ஷனாக, அவரால் ‘என் பிள்ளைகள்’ என்று வாஞ்சையாக அழைக்கப்படும் அவரது இயக்க நிர்வாகிகள் ‘ப்ரிவியூ ஷோவோ, ரஷ் டைமிலேயோ அல்லது ரிலீஸான முதல் ஷோவோ  அந்த படத்தை நம்மாளுங்க பார்த்துடணும்.

ஒரு வேளை நம்ம அண்ணனை இமிடேட் பண்ணி, அசிங்கப்படுத்துற மாதிரியான கேரக்டர்களோ அல்லது காட்சிகளோ இருந்தால் அந்தப் படத்தை துவம்சம் செஞ்சுடுவோம்.’ என்று சத்தியமெடுக்காத குறையாக திட்டம் போட்டிருக்கிறார்களாம்.

பிள்ளைகளின் இந்த ‘ஆபரேஷன் காலா’ பிளான் சீமானுக்கு தெரியுமா என்பது புரியவில்லை!

PREV
click me!

Recommended Stories

இப்படியே போனால் காங்கிரஸ் அழிந்து விடும்.. தலைமை வேஸ்ட்.. ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த ஜோதிமணி!
ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!