மேற்கு வங்க தேர்தல் முடியட்டும்.. அடுத்து டெல்லி சர்க்கார்தான்.. மோடி இடத்துக்கு குறி வைக்கும் மம்தா பானர்ஜி.!

Published : Mar 19, 2021, 09:01 AM ISTUpdated : Mar 19, 2021, 11:21 AM IST
மேற்கு வங்க தேர்தல் முடியட்டும்.. அடுத்து டெல்லி சர்க்கார்தான்.. மோடி இடத்துக்கு குறி வைக்கும் மம்தா பானர்ஜி.!

சுருக்கம்

மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியமைத்த பிறகு எங்களுடைய அடுத்த குறி, மத்தியில் ஆட்சி அமைப்பதுதான் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கொல்கத்தாவில் நடந்த பிரசார கூட்டத்தில் மம்தா பேசுகையில், “மேற்கு வங்கத்தை அம்பான் புயல் தாக்கிய பிறகு நிவாரணப் பணிகளுக்காக கோடிக்கணக்கில் எனது அரசு செலவிட்டது. புயல் பாதிப்பு ஏற்பட்டபோது நாங்கள் மக்களுடனேயே இருந்தோம்.

அவர்களுக்காகப் பணியாற்றினோம். அப்போது பாஜக தலைவர்கள் எங்கே சென்றார்கள்? மக்கள் பிரச்னைக்காக அவர்கள் எப்போதும் முன் நின்றதேயில்லை.


இப்போது தேர்தல் வருகிறது என்றவுடன் ஹெலிகாப்டர்களில் பண மூட்டைகளுடன் வருகிறார்கள். மக்களைக் கவர்ந்து ஓட்டுக்களை திருடிச் செல்ல முயற்சிக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும். அதன் பிறகு எங்களுடைய அடுத்த குறி, மத்தியில் ஆட்சி அமைப்பதுதான்” என்று மம்தா பானர்ஜி பேசினார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!