ஜார்ஜ் பொன்னையாவை வெளியில விடுங்க... விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வேண்டுகோள்..!

Published : Jul 26, 2021, 02:00 PM IST
ஜார்ஜ் பொன்னையாவை வெளியில விடுங்க... விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வேண்டுகோள்..!

சுருக்கம்

கைது செய்யப்பட்டுள்ள அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையாவுக்கு ஏற்கனவே, இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செயற்கை இதயமுடுக்கி பொருத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையாவுக்கு ஏற்கனவே, இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செயற்கை இதயமுடுக்கி  பொருத்தப்பட்டுள்ளதால் பிணையில் விடுவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான வன்னியரசு கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்துக் கடவுள்களையும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக கிறிஸ்தவ மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர் தேடப்பட்டு வந்தார். சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரில் தேடப்பட்டு வந்த கிறிஸ்துவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையாவை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் வைத்து போலீசார் கைது செய்தார்கள் . அவரை கன்னியாகுமரிக்கு அழைந்து வந்த போலீசார் விசாரணைக்கு பின்னர் குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ‘’கைது செய்யப்பட்டுள்ள அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையாவுக்கு ஏற்கனவே, இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செயற்கை இதயமுடுக்கி பொருத்தப்பட்டுள்ளது. வயதையும் உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு அருட்தந்தையை பிணையில் விடுவிக்க வேண்டும்’’ என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு கேட்டுக் கொண்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?