பாஜகவை பார்த்து பயந்து நடுங்குற காங்கிரஸ்காரங்க வெளியே போலாம்.. கதவு திறந்தே இருக்கு.. ராகுல் ஆக்ரோஷம்.!

By vinoth kumarFirst Published Jul 17, 2021, 10:49 AM IST
Highlights

பயமற்றவர்கள் தான் நமது கட்சிக்கு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு வெளியே பயமற்ற பலர் இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இல்லை. கட்சிக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களை காங்கிரஸுக்குள் கொண்டு வர வேண்டும் என ராகுல் காந்தி கூறினார். 

கட்சியின் கொள்கையில் இருந்து விலகிச் செல்ல விரும்புபவர்கள் கட்சியில் இருக்கத் தேவையில்லை. அவர்கள் வெளியேறலாம் என ராகுல்காந்தி காட்டமாக கூறியுள்ளார். 

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சமூகவலை தளங்களில் செயலாற்றும் கட்சி நிர்வாகிகளுக்கான சந்திப்பு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில்;- பாஜக மீது பயத்துடன் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்.க்கு சென்று  விடுங்கள். அவர்கள் வெளியேறுவதற்கு கதவு திறந்தே உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அச்சமற்ற  நபர்கள் தேவை. அதுவே கட்சியின் சித்தாந்தம். 

காந்திய கொள்கை மீது நம்பிக்கையுடையவர்கள் மட்டுமே நமக்கு தேவை. அவர்களுக்காகவே நமது கட்சி செயல்படுகிறது. கட்சியின் கொள்கையில் இருந்து விலகிச் செல்ல விரும்புபவர்கள் கட்சியில் இருக்கத் தேவையில்லை. அவர்கள் வெளியேறலாம்.

பயமற்றவர்கள் தான் நமது கட்சிக்கு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு வெளியே பயமற்ற பலர் இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இல்லை. கட்சிக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களை காங்கிரஸுக்குள் கொண்டு வர வேண்டும் என ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் தலைமை, கட்சிக்குள் அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

click me!