வரிசையில் நின்று வாக்களித்த முதல் முதலமைச்சர்..! எடப்பாடி தி கிரேட்..!

Published : Apr 18, 2019, 09:05 AM ISTUpdated : Apr 18, 2019, 09:47 AM IST
வரிசையில் நின்று வாக்களித்த முதல் முதலமைச்சர்..! எடப்பாடி தி கிரேட்..!

சுருக்கம்

சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிலுவப்பாளையம்  வாக்குச்சாவடியில் முதல் அமைச்சர் பழனிசாமி, வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.இதேபோல் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் உள்ளிடடோரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் வாக்களர்கள் ஆர்வத்துடன் சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். சேலம் மக்களவை தொகுதிக்குட்பட்ட சிலுவைப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை வரிசையில் நின்று பதிவு செய்தார். 

தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன். உடல் நலம்குன்றிய நிலையிலும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்வித் தலைவர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.


 
இதே போல் ஆழ்வார்போட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் திமுக மகளிர் அணித் தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளரும்ன கனிமொழி தனது தாய் ராசாத்தி அம்மாளுடன் வாக்களித்தார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் .

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குப் பதிவு மையத்தில்  நடிகை குஷ்பு  தனது வாக்கை செலுத்தினார்.

மேலும் நடிகர்கள்  சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!