தொடங்கியது தேர்தல்... ஆர்வமுடன் காத்திருக்கும் வாக்காளர்கள்... ரஜினி, விஜய், அஜித் காலையிலேயே வாக்களித்தார்கள்!

By Asianet TamilFirst Published Apr 18, 2019, 7:54 AM IST
Highlights

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தா நடிகர் அஜித்  தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள தொடக்கப்பளியில் வாக்களித்தார். நடிகர்கள் விஜய், ஸ்ரீகாந்த், விஜய் ஆண்டனி ஆகியோர் காலையிலேயே வாக்களித்தார்கள். தொடர்ந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்துவருகிறார்கள்.
 

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தேர்தலிலும் காலை 7 மணி முதல் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்துவருகிறார்கள்.


தேர்தலில் அதிமுக தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. தவிர அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்களும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் 18 பேரும், அங்குள்ள ஒரு சட்டசபை தொகுதியில் 8 பேரும் களத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 67,720  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இன்று காலை 7 மணிக்கு இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கே வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆர்வமுடன் வாக்காளர்கள் வாக்களித்துவருகிறார்கள். முதியவர்கள், பெண்கள் பலர் காலையிலேயே வாக்களிக்க வரிசையில் காத்திருந்தார்கள். 
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது வாக்கை காலை 7.30 மணியளவில் செலுத்தினார். புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியும்  தனது வாக்கை காலை 7 மணிக்கே பதிவு செய்தார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தா நடிகர் அஜித்  தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள தொடக்கப்பளியில் வாக்களித்தார். நடிகர்கள் விஜய், ஸ்ரீகாந்த், விஜய் ஆண்டனி ஆகியோர் காலையிலேயே வாக்களித்தார்கள். தொடர்ந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்துவருகிறார்கள்.
மதிய உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறும். மதுரையில் மட்டும் காலை 8 மணிவரை தேர்தல் நடைபெறும். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் 2 மணி நேர இடைவெளியில் பதிவான வாக்கு சதவீத விவரங்கள் வெளியிடப்படும். தேர்தலையொட்டி தமிழகம் முழுவது துணை ராணுவ படையினருடன் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

click me!