சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா இல்லை... உறுதி செய்த மருத்துவமனை.. ஆதாரம் உள்ளே..!

Published : Jun 21, 2020, 03:17 PM ISTUpdated : Jun 24, 2020, 12:33 PM IST
சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா இல்லை... உறுதி செய்த மருத்துவமனை.. ஆதாரம் உள்ளே..!

சுருக்கம்

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உறுதியாக கொரோனா இல்லை என்பதை அப்பல்லோ மருத்துவமனை உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் சோதனை அறிக்கை வெளியாக உள்ளது.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உறுதியாக கொரோனா இல்லை என்பதை அப்பல்லோ மருத்துவமனை உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் சோதனை அறிக்கை வெளியாக உள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவைத் தடுக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் தொகுதியில் களப்பணியாற்றி வந்த அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, உடனே அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு வருவதற்குள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா என்று பல்வேறு ஊடகங்களில் செய்தியை வெளியிட்டன.

தற்போது அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நெகடிவ் என வந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு வாக்குறுதி கொடுத்த இபிஎஸ்... வேட்டு வைக்கும் ராமதாஸ்..! அதிமுகவுக்கு ரூட் கொடுக்கும் திருமா..!
சீட்டு வாங்கி கொடுத்த ஓபிஎஸ்க்கு ஆப்பு வைத்த எம்பி தர்மர்..! மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்..