
அதிமுக பொதுச் செயலாளர் பதவி விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் சசிகலா அணியினர் 12,752 ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு ஆவணத்திலும் மாவட்ட நிர்வாகிகளின் கையெழுத்து உள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக ஓ.பி.எஸ். அணி, சசிகலா அணி என்று இரண்டாக உடைந்தது.
இதைத் தொடர்ந்து ஆர்கே நகர் தேர்தலையொட்டி இரட்டை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
தொடர்ந்து சசிகலா அணிக்கு அதிமுக அம்மா கட்சி என்றும் ஓ.பி.எஸ். அணிக்கு அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியையும் அவர்கள் தேர்வு செய்தனர்.
இந்நிலையில் அதிமுக பெயர், இரட்டை இலை சின்னம் தொடர்பாக இரு தரப்பினரும் தாக்கல் செய்த மனுக்கள் தேர்தல் கமிஷன் முன் விசாரணையில் உள்ளது.
இரு அணியினரும் தங்கள் பக்கம் உள்ள மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை அவர்களிடம் கையெழுத்து பெற்று பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளனர்.
ஓபிஎஸ் அணி சார்பில் கூடுதலாக 12,600 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரம் தேர்தல் கமிஷன் முன் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சசிகலா அணி சார்பில் இன்று டெல்லி தேர்தல் கமிஷனில் வுதிய பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 1991 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சசிகலா அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது 12752 பக்கங்கள் கொண்ட புதிய பிரமாணப் பத்திரம் இன்ற தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரமாணப் பத்திரத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கையெழுத்திட்டிருக்கிறார்கள்