
கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை பொதுமக்களிடம் இருந்து 17.20 லட்சம் குறை தீர் மனுக்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு வந்துள்ளன.
இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் இருந்து வந்துள்ளன என்று மக்களவையில் நேற்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியதாவது-
கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் மத்திய அரசின் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு மையத்துக்கு மக்கள் தரப்பில் இருந்து 17.20 லட்சம் குறைதீர்ப்பு மனுக்கள் வந்துள்ளன.
இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து அதிகபட்சமாக 3 லட்சம் புகார்களில், 2.88 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டன, , மஹாராஷ்டிராவில் 1.81 லட்சம் மனுக்களில் 1.65 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
டெல்லி மாநிலத்தில் இருந்து ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 486 புகார்களில், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 310 புகார்களுக்கு தீர்ரு காணப்பட்டுவிட்டன. இதில் 170 புகார்கள் கடந்த 2016ம் ஆண்டுக்கு முந்தியதாகும்.
பா.ஜனதா கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 91 ஆயிரத்து 926 புகார்களும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து 81 ஆயிரத்து 275 புகார்களும், குஜராத் மாநிலத்தில் இருந்து 77 ஆயிரத்து 560 புகார்களும், சட்டீஸ்கரில் இருந்து 26 ஆயிரத்து 738 புகார்களும் வந்தன.
கர்நாடகாவில் இருந்து 88,074, மேற்கு வங்காளத்தில் இருந்து 85,440, அரியானாவில் இருந்து 74,002, தமிழகத்தில் இருந்து 71, 525 , கேரளாவில் இருந்து 43, 893 புகார்களும் வந்தன. மேலும், பஞ்சாப்பில் இருந்து 36,819, தெலங்கானாவில் 33,037, ஜார்கண்ட் 32,759, ஓடிசாவில் இருந்து 32, 225, ஆந்திராவில் இருந்து 30,020 புகார்களும் வந்தன.
உத்தரகாண்ட், 29,263, அசாம் 23,950, இமாச்சலப் பிரதேசம் 12,991, ஜம்மு காஷ்மீர் 11,757, சண்டிகர்9,215, கோவா 4,182, திரிபுரா 3,135, மேகாலயா 2,223, புதுச்சேரி 2,220 அந்தமான் நிகோபர் 2,144,மணிப்பூரில் இருந்து 1,544, அருணாச்சலப்பிரதேசம் 1002, நாகலாந்து 701, தத்ரா அன்ட் நகர் ஹவேலி 674, சிக்கிம் 585, டாம்,டையு 491, லட்சத்தீவு 104 புகார்களும் வந்தன.
இவ்வாறு அவர் பேசினார்.