அரசியல்  என்ட்ரி குறித்து  கருணாநிதியிடம்  கூறி ஆசி பெற்றேன் …..  ரஜினிகாந்த் பரபர பேட்டி !!

 
Published : Jan 03, 2018, 09:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
அரசியல்  என்ட்ரி குறித்து  கருணாநிதியிடம்  கூறி ஆசி பெற்றேன் …..  ரஜினிகாந்த் பரபர பேட்டி !!

சுருக்கம்

I received a blessing from Karunanidhi about the political entry told Rajinikanth

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து புதிய கட்சி தொடங்குவது குறித்து சொல்லி அவரிடம் ஆசி பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி, உடல்நலம் விசாரித்தாக கூறினார்.

ரஜினிகாந்த், தான் அரசியலில் இறங்குவது உறுதி என அறிவித்து விட்டு, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதாக வெளியான  தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று மாலை 7.30 முதல் 8 மணி வரை ரஜினிகாந்த் கருணாநிதியை சந்திக்க நேரம் கொடுக்கப் பட்டது. இதை அடுத்து, போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கிளம்பிய ரஜினி காந்த், அருகில் உள்ள கோபாலபுரத்துக்கு  காரில் புறப்பட்டுச் சென்றார்.

கோபாலபுரம் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய  அவர் திமுக தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்திக்க செல்கிறேன் என்றும். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க உள்ளேன் என்றும் கூறிய ரஜினி   கருணாநிதி என்னுடைய நீண்டகால நண்பர் என்றார்

இதையடுத்து கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வரும்  திமுக., தலைவர் மு.கருணாநிதியை  அவர் சந்தித்தார். கோபாலபுரம் வந்த ரஜினி காந்த்தை விட்டு வாசலுக்கு வந்து வரவேற்றார் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின் செய்தியார்களிடம்  பேசிய ரஜினிகாந்த், கருணாந்திக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன் என்றார்.

மேலும் தனது அரசியல் பிரவேசம் குறித்து தெரிவித்து கருணாநிதியிடம் ஆசி பெற்றேன் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

தனது அரசியல்  என்ட்ரி குறித்த அறிவிப்புக்கு பின் ரஜினிகாந்த் சந்திக்கும் முதல் தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி வருகையையொட்டி அவரது  ரசிகர்கள் கோபாலபுரத்தில் குவிந்திருந்தனர்.  சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.*

 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!