நகை கொள்ளையில் திடீர் திருப்பம்... அட இப்படி ஒரு பெருந்தன்மையுள்ள மனிதரா...!! லலிதா நகைக்கடை உரிமையாளருக்கு குவியும் பாராட்டு...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2019, 3:18 PM IST
Highlights

இத்தனை பாதுகப்பு வளையங்களையும் மீறி கொள்ளயடிப்பதென்பது கடை ஊழியர்களின் துணையில்லாமல் சாத்தியமில்லை என  போலீசார் பலமாக சந்தேகி க்கின்றனர். இதனால் கடை ஊழியர்களை விசாரித்தே ஆக வேண்டும் என  போலீஸ் திட்டமிட்டுள்ள நிலையில், 13 கோடி நகைக்காக இத்தனை ஆண்டு காலமாக தன் கடையில் பணியாற்றிவரும் நேர்மையான ஊழியர்களையும் இது சங்கடபட வைக்கும் எனபதால் தன் கடை ஊழியர்களை எந்தவிதத்திலும் கண்ணியக் குறைவாக நடத்திவிட வேண்டாம் என்று போலீசாரிடம் நகைக்கடை உரிமையாளர் கிரண்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொல்லைக்கு  கடை உரிமையாளர் கிரண்குமாரின் நெருங்கிய ஊழியர்களே கொள்ளை கும்பலுக்கு உதவி செய்திருக்ககூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் கடை ஊழியர்களை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ள நிலையில், வெறும்  13 கோடி ரூபாய் நகைக்காக தன் கடைஊழியர்களை கண்ணியக் குறைவாக நடத்திவிட வேண்டாமென போலீசாரிடம் நகைக்கடை உரிமையாளர் கிரண்குமார் கோரிக்கைவைத்துள்ளது கடை ஊழியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது,   24 மணி நேரமும் கடையை கண்காணிக்கும் வகையில்  முப்பதுக்கும் மேற்பட்ட சிசிடீவி கேமிராக்கள் அங்கு பொருத்தப்பட்டுள்ளது.  அத்துடன்  ஷிப்டுக்கு ஆறு செக்யூரிட்டிகள் என்ற முறையில் 18 செக்யூரிட்டிகள் மாறி மாறி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தனையையும் தாண்டி எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்பதுடன், பாதுகாப்புக்கு அலாரம்,  எச்சரிக்கை கொடுக்க எஸ்எம்எஸ் தொழில் நுட்பம் போன்ற அம்சங்களையெல்லாம் தாண்டி நகைளை கொள்ளையடிப்பது அவ்வளவு  சாமானியம் அல்ல. எனவே இது கடை ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியம் இல்லை என போலீசார் சந்தேகிக்கின்றனர்.  இந்த சம்பவத்திற்கு கடை ஊழியர்கள் அல்லது கடை உரிமையாளர் கிரண்குமாருக்கு நம்பிக்கைக்குரியவர்களில்  யாரோ ஒருவர்தான் உதவியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

பொதுவாக இரவுநேரம் ஆனாலே லலிதா ஜூவல்லரி அமைந்திருக்கும் பகுதிக்கு செல்லவே மக்கள் அச்சப்படுவர், ஏன் என்றால் கடையைச் சுற்றி அவ்வளவு நாய்கள் இருக்கும் என்பதுதான் . எப்போதும் கடை காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடப்பது வழக்கம், கொள்ளை போன அன்றும்கூட காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிவரை கடை இயங்கியது. குறிப்பாக இதில் பொதுவாக எழும்  சந்தேகம் என்னவென்றால்,  சுவற்றில் துளைபோட்டு கொள்ளையடிக்கும் அளவிற்கு கொள்ளையர்களுக்கு நேரம் இருந்ததா.? சுவற்றில் துளைபோடும்போது அங்கு பணியில் செக்யூரிட்டிகள் இல்லையா. சுவற்றில் துளைபோடும் போது நிச்சயம் சத்தம் வந்திருக்கும் ,அதையும் மீறி  செக்யூரிட்டிகள் என் செய்து கொண்டிருந்தார்கள்.?  என பல்வேறு கேள்விகள் எழுகிறது. 

போலீசாரைப் பொருத்த வரையில் ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவிற்கு சுவற்றில் துளை போடப்பட்டுள்ளது என்றால், அது ஒரு நாளில் போடப்பட்ட துளையாகத் தெரியவில்லை. கடை ஊழிர்களில் ஒத்துழைப்புடன் பத்து நாட்களுக்கும் மேலாக இரும்பு கம்பியால் ஒவ்வொரு செங்கல்லாக பெயர்த்தெடுத்து அந்த துளை போடப்பட்டு இருக்க வேண்டும். சரியாக நகை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு நேராகத் துளை போடப்பட்டது எப்படி. இத்தனை நாட்களாக கட்டிடத்தில் துளை போடும் அளவிற்கு அதை மெயின்டனன்ஸ் செய்யும் குழு என்ன செய்து கொண்டிருந்தது.? அவர்கள் என்ன தூங்கிக்கொண்டிருந்தார்களா.? என சரமாரி சந்தேகம் எழுகிறது. அத்துடன் கடைக்கு  உள்ளே நுழையும் கொள்ளையர்கள் எந்தவித பதற்றமோ அச்சமோ  இல்லாமல் நிதானமாக  நகைளை கொள்ளையடிக்கின்றனர். பிறகு தங்கநகைகளை எப்படி அடுக்க வேண்டுமோ அப்படி அடுக்கி வைத்து கொண்டு செல்கின்றனர். இவற்றையெல்லாம் பார்த்தால். கடையில் வேலை செய்பவர்கள் அவர்களுக்கு உதவியுள்ளது நன்கு தெரிகிறது.

 

எனவே இத்தனை பாதுகப்பு வளையங்களையும் மீறி கொள்ளயடிப்பதென்பது கடை ஊழியர்களின் துணையில்லாமல் சாத்தியமில்லை என போலீசார் பலமாக சந்தேகி க்கின்றனர். இதனால் கடை ஊழியர்களை விசாரித்தே ஆக வேண்டும் என  போலீஸ் திட்டமிட்டுள்ள நிலையில், 13 கோடி நகைக்காக இத்தனை ஆண்டு காலமாக தன் கடையில் பணியாற்றிவரும் நேர்மையான ஊழியர்களையும் இது சங்கடபட வைக்கும் எனபதால் தன் கடை ஊழியர்களை எந்தவிதத்திலும் கண்ணியக் குறைவாக நடத்திவிட வேண்டாம் என்று போலீசாரிடம் நகைக்கடை உரிமையாளர் கிரண்குமார் கோரிக்கை வைத்துள்ளார். அவரின் இந்த பெருந்தன்மை கடை ஊழியர்களை மட்டும் அல்ல விஷயத்தை கேள்விப்பட்ட அனைவரையும் நெகிழவைத்துள்ளது. அட இந்த காலத்தில் இப்படி ஒரு பெருந்தன்மையுள்ள மனிதரா என  லலிதா நகைக்கடை உரிமையாளர் கிரண் குமாரை பாராட்டுகின்றனர்.
 

click me!