எல்லையோர மக்களை கண்ணீரில் மூழ்கடித்த போர் பதற்றம்..!! 400 கோடி வருவாய் இழப்பு..!!

Published : Jun 22, 2020, 04:15 PM ISTUpdated : Jun 22, 2020, 04:16 PM IST
எல்லையோர மக்களை கண்ணீரில் மூழ்கடித்த போர் பதற்றம்..!! 400 கோடி வருவாய் இழப்பு..!!

சுருக்கம்

லே-வில் கிட்டத்தட்ட 400க்கும் அதிகமான ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் உள்ளன மே முதல் செப்டம்பர் வரை எங்கள் வணிகம் உச்ச கட்டதில் இருக்கும் ஆனால் கொரோனா வைரஸ் தொற்று மார்ச் முதல் எங்கள் வணிகத்தை முற்றிலுமாக முடக்கியது. 

எல்லையில் போர் பதற்றம், மற்றும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், லே மற்றும் லடாக் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கும் பிராந்தியமான லடாக்கிற்கு பல பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது ஏற்பட்டிருப்பது மிக மோசமான சூழல் என பிராந்திய மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  தங்களது முக்கிய பொருளாதாரமாகவும் தங்களின் ஒரே வாழ்வாதாரமாகவும் சுற்றுலாத் துறையே இருந்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மற்றும் எல்லை பதற்றம் காரணமாக ஒட்டுமொத்த வாழ்வாதாரமும்  முற்றிலுமாக முடங்கியுள்ளது. தற்போது இந்த பகுதியில் விமானங்கள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளன. 

ஆனால் விமானத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், எல்லையில் சாலைகள் அமைக்கும் பணியாளர்களும்  மற்றும ஊடகவியலாளர்கள் மட்டுமே பயணிக்கின்றனர். ஆனால் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் தடைபட்டுள்ளது.  2019 ஆம் ஆண்டின் ஜூன் இறுதி வரை 1.33 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் லடாக் வந்திருந்தனர். இந்தாண்டு இதுவரை வெறும் 6000 பேர் மட்டுமே இங்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலாத்துறை இந்த ஆண்டு வருவாயில் சுமார் 400 கோடிக்கு மேல் இழப்பை சந்தித்துள்ளது. 2020 எங்கள் வாழ்க்கையின் மிக மோசமான ஆண்டாக இருக்கும் என்று தோன்றுகிறது என லே-வில் ஹோட்டல் நடத்தி வருபவரும், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான குலாம் முஸ்தபா கூறியுள்ளார். 

லே-வில் கிட்டத்தட்ட 400க்கும் அதிகமான ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் உள்ளன மே முதல் செப்டம்பர் வரை எங்கள் வணிகம் உச்ச கட்டதில் இருக்கும் ஆனால் கொரோனா வைரஸ் தொற்று மார்ச் முதல் எங்கள் வணிகத்தை முற்றிலுமாக முடக்கியது.  தற்போது எல்லை பதற்றத்தால் அது மேலும் பாதிக்கப்பட்டுள்ளது, லடாக்கின் மக்கள் தொகையில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் சுற்றுலாத்துறையை சார்ந்துள்ளனர், ஹோட்டல் உரிமையாளர்கள், டாக்ஸி  ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், பயண முகவர்கள், மலையேற்றக்காரர்கள் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை கொரோனா முற்றிலுமாக சிதைத்த நிலையில் எல்லை பதற்றம் மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக குலைத்துள்ளது என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!