#UnmaskingChina: இந்திய வீரர்கள் காட்டிய தீரச்செயல்.. மெய்சிலிர்க்கும் முன்னாள் ராணுவ வீரர்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2020, 3:27 PM IST
Highlights

நம் வீரர்கள்  தீரத்துடன் போரிட்டதில் பல சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக எனக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சீனர்கள் இப்போது மட்டுமல்ல எப்போதுமே தங்கள் பக்கம் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை.

இந்திய-சீன எல்லையில் ஒருபுறம் போர் பதற்றம் மறுபுறம் கொரோனா தொற்று என எல்லையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
லே விலிருந்து 230 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர், லாடாக்கிற்கு ஏராளமான ராணுவத் துருப்புகளை நகர்த்த இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. சீன மக்கள் விடுதலை ராணுவமும் உண்மையான கட்டுப்பாட்டுக்கோட்டு பகுதியில் தனது படைகளை குவித்து வருகிறது, இது எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. எல்லையில் பதற்றம் மற்றும் தொற்றுநோய் காரணமாக லே-வில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்ட நிசப்தம் நிலவிவருவதாக கார்கில் போர் வீரரும், மகாவீர் சக்ரா விருது பெற்றவருமான சோனம் வாங்சுக் கூறியுள்ளார். 

மேலும் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிரிழந்த இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு சீனர்களை கொன்றிருக்க கூடும் என தான் நம்புவதாக கூறியுள்ளார், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை விவரிக்கும் அவர்,கடந்த ஒரு மாதகாலமாக சீனர்கள் இந்திய எல்லைக்குள் கூடாரம் உள்ளிட்ட சில கட்டமைப்புகளை உருவாக்கினர், இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்களின் கட்டமைப்புகள் அகற்றப்பட்டதா இல்லையா என்பதை பார்க்க ஒரு கண்காணிப்பு குழு அங்கு சென்றது. பின்னர் அங்கு ஏற்பட்ட மோதலில் இந்தியா தீரமிக்க  20 வீரர்களை இழந்தது. ஆனால் அதற்கு பதிலடியாக நம் வீரர்கள் ஏற்படுத்திய உயிரிழப்புகள் 40 முதல் 43 வரை இருக்கும். அது நம் உயிரிழப்புடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கிற்கும் அதிகம்.  நம் வீரர்கள் மிகக்கடுமையாக பதிலடி கொடுத்தனர் என்று நான் நம்புகிறேன், முக்கியமாக பீகார் ரெஜிமெண்ட்க்கு ஆதரவாக அங்கு வந்த பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்த நம் இளம் வயது வீரர்கள் சீனர்களை மிக ஆக்ரோஷமாக தாக்கினர்,  நம் வீரர்கள்  தீரத்துடன் போரிட்டதில் பல சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக எனக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சீனர்கள் இப்போது மட்டுமல்ல எப்போதுமே தங்கள் பக்கம் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை. 

இது 1962-ஆம் ஆண்டிலும் நடந்தது, 1962 யுத்தத்தில் இந்திய வீரர்கள் சுமார் 1000 சீனர்களை கொன்றனர், அதேநேரத்தில் நம் தரப்பில் 130 வீரர்களை நாம் இழந்தோம் அந்த நேரத்தில் கூட அவர்கள் தங்கள் பக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஒப்புக்கொள்ளவில்லை. இந்த முறையும் அவர்கள் அதேபோல தங்கள் பக்கம் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் கூறினார். இந்நிலையில் இதுவரை லடாக்கில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 710 ஆக உயர்ந்துள்ளது, இதில் லே-வில் 146 பேர் மற்றும் கார்கில் மாவட்டத்தில் 572 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்றனர், மொத்தம் 539 நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர், 120 பேர் கோவிட் பராமரிப்பு மையங்களில் உள்ளனர். இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கை நோக்கி ஏராளமான ராணுவ வாகனங்கள் நகர்ந்து வருவதால், ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பொதுமக்கள் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளது.  குஷோக் பாகுலா ரிம்போச்சி விமான நிலையத்தில் ஒரு கோவிட் ஸ்கிரீனிங் மையம் நிறுவப்பட்டுள்ளது, அங்கு வரும் அனைத்து பயணிகளின் உடல் வெப்பம் திரையிடப்படுகிறது,

 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள, லே-வின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மோட்டப் டோர்ஜே, கடந்த ஒரு வாரத்தில் கோவிட் -19 வழக்குகள் அதிகரித்த பின்னர், மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்கை அறிவித்தது. எந்த நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் எங்களிடம் 42 ஐசியு படுக்கைகள் மற்றும் 21 வென்டிலேட்டர்கள் கொண்ட பிரத்யேக கோவிட் மருத்துவமனை உள்ளது. புற சுகாதார நிறுவனங்களில் கோவிட் பராமரிப்பு மையங்களைத் தவிர மொத்தம் 110 படுக்கைகளுடன் இரண்டு கோவிட் பராமரிப்பு மையங்களும் உள்ளன. எந்தவொரு நோயாளியையும் இதுவரை வென்டிலேட்டர் ஆதரவில் வைக்கப்படவில்லை என கூறியுள்ளார். 
 

click me!