பாஜகவில் இணைய முடிவெடுத்த லேடி சூப்பர் ஸ்டார்... அமித் ஷா முன்னிலையில் சேர்கிறார்..!

Published : Nov 24, 2020, 03:50 PM IST
பாஜகவில் இணைய முடிவெடுத்த லேடி சூப்பர் ஸ்டார்... அமித் ஷா முன்னிலையில் சேர்கிறார்..!

சுருக்கம்

பிரபல நடிகையும். முன்னாள் எம்.பி.,யுமான விஜயசாந்தி பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

பிரபல நடிகையும். முன்னாள் எம்.பி.,யுமான விஜயசாந்தி பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தென்னிந்திய பிரபல நடிகை குஷ்பு சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். அடுத்து பிரபல நடிகை விஜயசாந்தி பா.ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 1998-ம் ஆண்டு நடிகை விஜயசாந்தி பா.ஜனதாவில் இருந்த போது இவருக்கு மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் பா.ஜனதாவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.

அந்த கட்சிக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை. எனவே, 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்தார். அந்த கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். 2014-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்.

2018-ம் ஆண்டு விஜயசாந்திக்கு காங்கிரசில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரசுக்காக உழைக்கப் போவதாக கூறினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் விஜயசாந்திக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, அந்த கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

அடுத்து மீண்டும் பா.ஜனதாவில் இணைய திட்டமிட்டுள்ளார். விரைவில் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைவார் என கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜ.க தேசிய துணைத்தலைவர் டி.கே. அருணா கூறுகையில், ’’நடிகை விஜயசாந்தி விரைவில் பா.ஜ.க.வில் இணைய உள்ளார்.  இது தவிர மேலும் பலர் பா.ஜ.கவில் இணைய உள்ளனர்’’எனத் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!