'லாடம்' கட்டி விடுவார்கள்... உதயநிதிக்கு உடன்பிறப்பு எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Nov 26, 2020, 4:05 PM IST
Highlights

போலீஸ்காரர்கள் 'லாடம்' கட்டி விடுவர்! உங்கள் அப்பாவுக்கு, 'மிசா'வில் நடந்தது ஞாபகம் இருக்கிறதா? என உதயநிதி ஸ்டலினுக்கு திமுக தொண்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

போலீஸ்காரர்கள் 'லாடம்' கட்டி விடுவர்! உங்கள் அப்பாவுக்கு, 'மிசா'வில் நடந்தது ஞாபகம் இருக்கிறதா? என உதயநிதி ஸ்டலினுக்கு திமுக தொண்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

திருப்பூரை சேர்ந்த டி.கலையரசன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை பற்றி விமர்சித்துள்ளது வைலராகி வருகிறது. அதில், ’’தம்பி உதயநிதி! நீங்க ஒரு கூட்டத்துல பேசிய, மிரட்டல் பேச்சை கேட்டேன். நானும் தி.மு.க.,காரன் தான். பல வருடமா அரசியலில் இருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன், போலீசிடம் ஒட்டவும் கூடாது; உரசவும் கூடாது. அது, உங்களுக்கு தெரியுமான்னு, எனக்கு தெரியல!

நீங்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது, 'இன்னும் நாம் ஆட்சிக்கு வரவில்லை... பார்த்துக் கொள்கிறோம். ஸ்பெஷல் டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ். பேரெல்லாம் நாங்கள் ஞாபகம் வைத்திருப்போம். இன்னும் ஐந்து மாதம் தான் இருக்கிறது. எங்களுக்கு தெரியாத காவல் துறையா..? நாங்க பார்க்காத காவல் துறையா..?' என, மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறீர்கள்.

அடுத்து தி.மு.க., தான் ஆட்சிக்கு வரப்போகிறது. எனவே, போலீஸ் அதிகாரிகள் அஞ்சி நடுங்கி இருக்க வேண்டும் என, கருதுகிறீர்கள் போலிருக்கிறது. ஓய்வு பெறும் வரை பணியில் இருப்பவர்கள், போலீசார். அரசியல்வாதிகளை போல, மாறக் கூடியவர்கள் அல்ல. ஒரு போலீஸ்காரர், எப்போதுமே இன்னொரு போலீஸ்காரரை விட்டுக் கொடுக்க மாட்டார்.

போலீசை, அதுவும் உயர் போலீஸ் அதிகாரியை, கிள்ளுக்கீரையாக எண்ணி மிரட்டல் தொனியில் பேசினால், அதை மற்ற போலீசார் எல்லாம் எப்படி எடுத்துக் கொள்வர்? தன்னையேஅவமானப்படுத்தும் வகையில் பேசியதாகத் தான், ஒவ்வொரு போலீஸ்காரரும் எடுத்துக் கொள்வார். ஒரு வேளை தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர முடியாவிட்டால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஏதாவது பிரச்னையில் நீங்கள் மாட்டினால் தெரியும்; போலீஸ்காரர்கள் 'லாடம்' கட்டி விடுவர்! உங்கள் அப்பாவுக்கு, 'மிசா'வில் நடந்தது ஞாபகம் இருக்கிறதா? சிட்டிபாபு மட்டும் இல்லாவிட்டால், இன்று தளபதி இருக்க மாட்டார். என்ன அடி கொடுத்தனர்; எதனால் என்று அவருக்குத் தெரியும்’’ என அறிவுறுத்தி இருக்கிறார். 


 

click me!