
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளமல், தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை என கூறுவது மக்களின் உயிருடன் விளையாடும் செயல் என அதிமுக அரசை திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன் கண்டித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் 172 வது வட்ட குடிசை மாற்று குடியிருப்பு பகுதிகளில் திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியன் அவர்கள் கொரோனா பாதுகாப்பு உபகரணங்களான சோப் ,மாஸ்க் ,சேனிடைசர் ,கபசரக் குடிநீர் ஆகியவற்றை பொது மக்களுக்கு வழங்கினர். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நான்காவது நாளாக ஆயிரம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருவதாகவும், மேலும் மக்களிடத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.
மேலும் தற்போது உள்ள நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு என்பது தடுப்பூசி ஒன்றே என்ற நிலை ஆகிவிட்டது. முதற்கட்ட தடுப்பூசி போட்ட பிறகு 4 வாரங்களில் செலுத்தப்பட வேண்டிய இரண்டாம் கட்ட தடுப்பூசி தற்போது 6 முதல் 8 வாரங்கள் கழித்து செலுத்தப்படுவதால் மக்களுக்கு மருந்துகளின் பயன் கிட்டுவதில்லை. இந்நிலையை போக்க தமிழக அரசுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு சீராக வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் மு.க ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தினார். மேலும் கடந்த ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் திமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் வெளியில் வந்து அனைவருக்கும் உதவினார்கள் ஆனால் ஆட்சியிலிருக்கும் அமைச்சர்கள் வெளியில் வருவதற்குகூட தயங்கினார்கள்.
இந்நிலையில் நேற்று கொளத்தூர் பகுதியில் ஸ்டாலின் பொது மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனையிலேயே ஆக்சிசன் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளமல் அதை செய்யாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதை காரணமாக கூறி மக்களை உயிரில் விளையாடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதனால் ஆக்சிசன் உற்பத்தியை தமிழகத்திலேயே மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.