
டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்ததை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி முன்னாள் ராணுவத்தினர் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷண் கிரேவால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
முன்னாள் ராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ராகுல் காந்தியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குமரி ஆனந்தன், பீட்டர் அல்போன்ஸ், செய்தி தொடர்பாளர் குஷ்பு, மகளிர் அணியை சேர்ந்த நகமா, தங்பாலு, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் .ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.