ஜெயலலிதா பாணியில் வாக்கு சேகரித்த குஷ்பு... ஸ்டாலின் மீது வைத்த பகீர் குற்றச்சாட்டால் பரபரப்பு!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 28, 2021, 3:45 PM IST
Highlights

ஆயிரம் விளக்கு தொகுதி, ஆயிரம் விளக்குகளைப் போன்று ஜொலிக்க  நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்

சென்னையின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் எழிலன் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. தினந்தோறும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வரும் குஷ்புவிற்கு ஆதரவாக நேற்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி, ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள புஷ்ப நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார். 

பிரச்சாரத்தில் பேசிய குஷ்பு, கடந்த 5 ஆண்டுகளில் திமுக இந்த தொகுதியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. இந்த முறை இங்கு நான் வெற்றிபெற்றால் அது மக்களின் வெற்றி. பெண்களின் பயத்தை போக்க நான் சட்ட மன்றத்திற்கு செல்ல நினைக்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை அல்ல. அதிமுகவின் கோட்டை, பாஜகவின் கோட்டை, கூட்டணி கட்சிகளின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இது திமுகவின் கோட்டை என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் கொளத்தூருக்கு சென்றிருக்க மாட்டார்” 

தொடர்ந்து பேசிய அவர், “ தி.மு.க பேச்சாளர்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார்கள். முதலமைச்சர் தாய் மூன்று மாதத்திற்கு முன் இறந்தார். அவரைப் பற்றி தவறாக பேசியுள்ளார்கள். ஸ்டாலின் தன்னுடைய ஆட்களை அனுப்பி வீட்டில் கல் விட்டு அடித்தார்கள். சேலையை இழுத்து அசிங்கப்படுத்தினர். ஜெயலலிதா சந்தித்த அவமானங்களை நானும் சந்தித்தேன்” என்று ஆவேசமாக பேசினார்.

 நான்  உங்கள் சகோதரியாக வேலை செய்வேன், ஆயிரம் விளக்கு தொகுதி, ஆயிரம் விளக்குகளைப் போன்று ஜொலிக்க  நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், “செய்வீர்களா? என்று ஜெயலலிதா கேட்பதைப் போல் நான் கேட்கிறேன். மக்களாகிய உங்களுக்காக நான் இருக்கிறேன், ஜெயலலிதா இருக்கிறார். என்னை சட்டசபைக்கு நீங்கள் அனுப்புவீர்களா?” என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் மக்களிடம் பிரச்சாரம் செய்தார். 

click me!