
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் கடந்த சில நாட்களாக தமிகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இவர் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறும் வரையில் பிரசாரத்தில் பங்கேற்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால் உடல்நலம் தேறியதும் மீண்டும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவேன்’ என குமரி அனந்தன் தெரிவித்தார். இதனிடையே தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த குமரி அனந்தனின் மகளும், தமிழக பாஜக தலைவருமான தமிழசை, தனது தந்தையில் உடல் நலம் குறித்து போன் மூலம் விசாரித்தார்.