ஆதி திராவிட மாணவர்களின் கல்விக்கடன் ரத்து !! முதலமைச்சரின் அடுத்த அதிரடி திட்டம் !!

By Selvanayagam PFirst Published Oct 10, 2018, 8:27 PM IST
Highlights

கர்நாடக மாநிலத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்த முதலமைச்சர் குமாரசாமி தற்போது ஆதிதிராவிட மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக கதவல்கள் வெளியாகியுள்ளன.

 

கர்நாடகத்தில் முதலமைச்சர்  குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் 45 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.  விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் பணிகள் தற்போது  நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த சமூகங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. அந்த கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து குமாரசாமி ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளார்.

கர்நாடகத்தில் உள்ள வங்கிகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்களின் கல்வி கடன் எவ்வளவு உள்ளது என்பது குறித்து அறிக்கை வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் சுமார் 20  ஆயிரம் கோடி ரூபாய்  அளவுக்கு இருப்பில் உள்ளதாகவும், அந்த நிதியை பயன்படுத்தி கல்வி கடனை தள்ளுபடி செய்ய குமாரசாமி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

click me!