மோடிக்குத்தான ஓட்டுப் போட்டீங்க… அவருகிட்ட போய் கேளுங்க !! பொது மக்களிடம் கோபப்பட்ட குமாரசாமி !!

By Selvanayagam PFirst Published Jun 26, 2019, 10:32 PM IST
Highlights

தங்க சுரங்கத்தில் தங்களுக்கு முறையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த தொழிலாளர்களிடம், நீங்கெல்லாம் மோடிக்குத் தான ஓட்டுப் போட்டீங்க, அவர்கிட்ட போய் கேளுங்க என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி கிராமங்களில் தங்கி, அங்கு இருக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் அவர் ராய்ச்சூர் கிராமத்திற்கு தங்க சென்று கொண்டிருந்தார்.  

இதற்காக குமாரசாமி கர்நாடக அரசு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது காரேகுடே கிராம மக்கள் வழியில் திரண்டிருந்தனர். அவர்கள் துங்கபத்ரா தங்க சுரங்கத்தில் சரியாக சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்பதை தெரிவிக்க கூடியிருந்தனர். அத்துடன் கர்நாடக அரசிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

இந்நிலையில் முதல்வர் குமாரசாமி அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து, 'நீங்கள் கலைந்து செல்கிறீர்களா அல்லது காவல்துறையினரை வைத்து லத்தியால் அடிக்க சொல்லவா ? நீங்கள் மோடிக்கு தான ஓட்டுப் போட்டீங்க அவரிடம் போய் இதுகுறித்து கேளுங்கள். உங்களுக்கு மரியாதை கொடுக்க தேவையில்லை என கோபத்துடன் தெரிவித்தார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து, விரைவில் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று வாக்களித்தார் 

click me!