சீண்டி சீண்டி சண்டை வளர்க்கும் சித்து!! குலுங்கி குலுங்கி அழுத குமாரு... கர்நாடகாவில் நடக்கும் காரசார கலவரம்

By sathish kFirst Published Jun 20, 2019, 12:39 PM IST
Highlights

இந்த அரசை சுமுகமாக நடத்த நான் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் வலியை வெளிப்படுத்த முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது மனக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக நான் முதல்வராகியும் மகிழ்ச்சி இல்லை என்று குமாரசாமி கூறியிருந்த நிலையில் தற்போது இந்தக் கருத்தையும் தெரிவித்துள்ளார்.
 

இந்த அரசை சுமுகமாக நடத்த நான் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் வலியை வெளிப்படுத்த முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது மனக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக நான் முதல்வராகியும் மகிழ்ச்சி இல்லை என்று குமாரசாமி கூறியிருந்த நிலையில் தற்போது இந்தக் கருத்தையும் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் உதவியுடன் மஜத கட்சி ஆட்சி செய்து வருகிறது.   என்னதான் கூட்டணி தயவில் வந்தாலும் துறை ரீதியாகவும், அமைச்சரவையிலும், கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று சன்னப்பட்ணாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி; நான் தினந்தினம் நான் மன வேதனையுடன் நாட்களைக் கடந்து செல்கிறேன் அதன் வலியை உங்களிடம் என்னால் சொல்லமுடியாது. ஆனால், மீதம் இருக்கும் நாட்களில் உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன். மக்களின் துயரத்தை போக்க அரசு சுமூகமாக நடத்த வேண்டும் என்ற பொறுப்பும் பொறுப்பு என்னிடம் உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிஜேபி தலைவரிடமிருந்து, நமது எம்எல்ஏவுக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் அவர்கள் பிஜேபி இணைந்தால் 10 கோடி வரை தர தயாராக இருப்பதாக பேரம் பேசுகிறார்கள். இப்படியான சம்பவங்களும் நடந்து வருகிறது. ஆனால் மாநில அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சித்தராமயா கூறியிருக்கிறார். இப்படி காங்கிரஸ் சீண்டி சீண்டி சண்ட வாங்கும் சம்பவமும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது.

இந்த சூழலில், நேற்று இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 49 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராகுலை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா, அதன் பின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி கலக்கப்படுகிறது கட்சியின் தலைவர் செயல் தலைவர் மற்றும் மாற்றப்படாமல் தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்துள்ளார்.

click me!