உள்ளே பாய்ந்து வெளியே பதுங்கிய கே.எஸ் அழகிரி... நேரம் பார்த்து காத்திருந்த திமுகவிற்கு பாய்ண்ட் எடுத்து கொடுத்த சோகம்...!!!

By Asianet TamilFirst Published Sep 6, 2019, 6:28 PM IST
Highlights

காங்கிரஸால் திமுகவோ அல்லது கூட்டணி கட்சிகளோ இன்றி தனித்து நின்று வெற்றிபெற முடியாதா? என்று அவர் வீரவேசமாக தொண்டர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். 


கூட்டணி இல்லாமல் நம்மால் வெற்றிபெற முடியாதா என தொண்டர்கள் முன்னிலையில் ஆவேசமாக பேசிவிட்டு தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களிடத்தில் கேட்டுதான் முடிவு செய்யப்படும் என செய்தியாளர்களிடத்தில்  கே.எஸ் அழகிரி பல்டியடித்து பேசியிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த  வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பியானதால் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியும் ,  திமுக விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடல்நலக்குறைவால் காலாமானதால்  விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதியும் காலியாக உள்ளது. அதற்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது குறித்து செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ் அழகிரி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெறும் எதிர்கட்சியாக மட்டுமே இருந்து வருகிறது. 

இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும்  கூட்டணி இல்லாமல் காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை. காமராஜர் காலத்துடன் காங்கிரசின் வெற்றி சகாப்தம் முடிந்து விட்டது என்று கூறினார். காமராஜர் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் அதனால் வெற்றி பெறுவது சுலபதாக இருந்தது ஆனால் தற்போது காங்கிரசில் கட்டுகோப்பு இல்லை என்றார். பாரம்பரியமிக்க அரசியல் கட்சியான காங்கிரஸால் திமுகவோ அல்லது கூட்டணி கட்சிகளோ இன்றி தனித்து நின்று வெற்றிபெற முடியாதா? என்று அவர் வீரவேசமாக தொண்டர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.  அத்துடன் நாங்குநேரி தொகுதி என்பது காங்கிரஸ் வசமிருந்த தொகுதி எனவே வரும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெட்பாளரையே நிறுத்தி தேர்தலை சந்திக்கவேண்டும் என்று  அவர் கூறினார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது குறித்து அவர் தொண்டர்களிடம் ஆற்றிய உரை,  வீடியோவாக வெளியாகி திமுக காங்கிரஸார் இடையே சலசலப்பை ஏற்படுத்து வருகிறது. இதனால் திமுக காங்கிரஸ்  கூட்டணி முறியப்போகிறது  என தகவல் வேகமாக பரவிவருகிறது. 

இதற்கிடையில் செயல் வீரர்கள் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த  கேஎஸ் அழகிரி,  நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துவது குறித்து   கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆலோசனை செய்த பிறகுதான்  முடிவு செய்யப்படும் என்று அப்படியே பல்டியடித்து பேசினார். கூட்டத்திற்கு உள்ளே ஒன்றும்  வெளியே வந்து வேறொன்றையும் அவர் பேட்டியாக கொடுத்ததை கண்ட காங்கிரஸார் இப்படி மாற்றி மாற்றி பேசி பல்டியடிப்பதே காங்கிரஸாருக்கு வேலையாகி விட்டது இப்படியே போனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காங்கிரஸை எவராலும் காப்பாற்ற முடியாது என்று தலையில் அடித்துக்கொண்டனர். 

click me!