போலீஸ் பிடியில் இருந்த எடப்பாடியை தில்லா நேரில் போய் சந்தித்த கிருஷ்ணசாமி.. என்ன சொன்னார் தெரியுமா.?

Published : Oct 19, 2022, 07:20 PM IST
போலீஸ் பிடியில் இருந்த எடப்பாடியை தில்லா நேரில் போய் சந்தித்த கிருஷ்ணசாமி.. என்ன சொன்னார் தெரியுமா.?

சுருக்கம்

அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுத்துள்ள எதிர்க்கட்சித் துணைத் தலைவரை சபாநாயகர் அங்கீகரிக்க மறுப்பது ஜனநாயகப் படுகொலைதான் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். 

அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுத்துள்ள எதிர்க்கட்சித் துணைத் தலைவரை சபாநாயகர் அங்கீகரிக்க மறுப்பது ஜனநாயகப் படுகொலைதான் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். ஆர்.பி உதயகுமார் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி  பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த கிருஷ்ணசாமி இவ்வாறு கூறினார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.  நேற்றைய கூட்டத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் அருகருகே அமர்ந்தனர். ஆனால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கக்கூட இல்லை. கூட்டம் தொடங்கியதும் தொடங்காததுமாக ஓபிஎஸ்சை அதிமுகவில் இருந்து நீக்கி விட்டதாகவும் கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நேற்று சட்டமன்ற கூட்டத்தில் சபாநாயகரிடம் வலியுறுத்தினர். ஆனால் கேள்வி நேரத்தின்போது அது குறித்து பேச முடியாது என சபாநாயகர் மறுத்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: தனக்கு இருக்கும் நெருக்கடியை மறைக்கவே இபிஎஸ் இப்படி செய்கிறார்.. போட்டு தாக்கும் மா.சுப்பிரமணியன்.!

இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனையடுத்து சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக கூறியும், ஓபிஎஸ்க்கு சாதகமாக திமுக அரசு நடந்துகொள்வதாக கூறியும், ஆர்.பி உதயகுமாரை எதிர்க் கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்க வலியுறுத்தியும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைத்தனர். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, தமிழக சட்டசபையில் 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை உள்ளடக்கிய அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது.

இதையும் படியுங்கள்:  அப்பாவி மாதிரி பேசிய எடப்பாடியும் இதுல குற்றவாளிதான்.. கேஸ் போட்டு தூக்குங்க.. கொதிக்கும் கே.பாலகிருஷ்ணன்.

நாடாளுமன்றம் சட்டமன்றம், நீதிமன்றம் இவை மூன்றும் நாட்டில் ஆன்மாவாக உள்ளன. ஆனால் இவை மூன்றும்  ஒன்று மற்றொன்றின் அதிகாரத்தில் தலையிடுவது இல்லை. ஆனால் ஆளும் கட்சியாக இருக்கும் என்ற ஒரே காரணத்தால் திமுக நினைத்த மட்டும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறது.

ஆனால் அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்த  அனுமதி மறுக்கிறது, அதிமுக எம்எல்ஏக்கள்  சேர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர், ஆனால் அதை சபாநாயகர் அங்கீகரிக்க மறுப்பது ஜனநாயக படுகொலை இவ்வாறு அவர் கூறினார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி