இந்த அன்புமணிக்கு எதுல அரசியல் செய்யணும்னு ஒரு விவஸ்த்தையே கிடையாது... கழுவி ஊத்தும் கேபி.முனுசாமி!

By sathish kFirst Published Nov 22, 2018, 1:42 PM IST
Highlights

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்திலிருந்து கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 50 இலட்சம் மதிப்பிலான நிவராண பொருட்கள் முன்னாள்அமைச்சரும், அ.தி.மு.க  துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி தலைமையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள்  அனுப்பி வைக்கப்பட்டது.

அவர்  கூறியதாவது: தமிழக அரசு கஜாபுயல் நிவாரண பணிகளை மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். அரசு எடுத்த நடவடிக்கையால் உயிரிழப்பு குறைந்துள்ளது. கால்நடைகள் காப்பாற்றபட்டுள்ளது.
 தமிழக அரசின் முன் எச்சரிக்கை காரணமாக தான் கஜா புயலில் மனித, கால்நடைகள் உயிர் சேதங்கள் குறைந்து உள்ளது.

உரிய நேரத்தில் நடவடிக்கையால்  கடல் பகுதியில் இருந்து மக்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளனர். அரசின் நடவடிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள். ஆனால் எதிர்கட்சி அரசு இணைந்து மக்களுடன் இணைந்து செயல்படவேண்டும் ஆனால் இதிலும் அரசியல் ஆதாயம் சிலர்தேடுகின்றனர்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சுற்றுபயணம் செய்துள்ளார் .அதுவரை அங்கு எந்த பிரச்சினனயும் இல்லை ஸ்டாலின் சுற்றுபயணத்திற்க்கு பிறகுதான் அங்கு பிரச்சினை வருகிறது. இதற்க்கு அவர் தான் பதில் அளிக்கவேண்டும். கேரளாவில் எப்படி அனைவரும் ஒன்றாக பணியாற்றினார்கள். இங்கு திமுக அரசியல் ஆதாயம் தேட கூடாது.

முதலமைச்சர் எடப்பாடி பழச்சாமி பாதிக்கபட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார் .மக்களை சந்திக்க எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஸ்டாலின் சுற்றுபயணம் செய்து தொண்டர்களை துண்டி விட்டு வந்துள்ளார் .எப்படியாவது முதலமைச்சர் ஆகவேண்டும் ஸ்டாலின் கனவு காண்கிறார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வரை பார்த்து சக்கரவர்த்தி திருமகனா என கேட்பது அரசியல் தெரியாமல் பேசுகின்றார். ஹெலிகாப்டர் மழை காரணமாகவே தரை இறங்க முடியவில்லை.மேலும் மழையில் உதவி பெற பொதுமக்கள் அலைய கூடாது என்ற நோக்கில் தான் முதல்வர் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ,துணை முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். விவசாயிகளின் கஷ்டம், பாதிப்பு தெரியும்.

அரசுடன் மக்களுடன் இணைந்து செயல்பட்டால் பேரிடர் பாதிப்பு குறையும். திமுக, உட்பட அனைத்து கட்சியினரும் நிவாரண தொகை வழங்கி வருகின்றனர்.புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால் ராமதாஸ், அன்புமணி புயல் நிவாரணத்திற்கு செய்தது என்ன? இவ்வாறு முனுசாமி கூறினார்.

click me!