"உங்கள் குடும்பத்தாரை ஜெயலலிதா ஏற்றாரா...? அம்மாவின் ஆன்மா மன்னிக்காது" - கே.பி.முனுசாமி காட்டம்

Asianet News Tamil  
Published : Feb 06, 2017, 05:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
"உங்கள் குடும்பத்தாரை ஜெயலலிதா ஏற்றாரா...? அம்மாவின் ஆன்மா மன்னிக்காது" - கே.பி.முனுசாமி காட்டம்

சுருக்கம்

உங்களை மீண்டும் சேர்த்து கொண்ட போது உங்களை மட்டுமே இணைத்தார். மற்றவர்களை சேர்க்கவில்லை ஏற்றுகொள்ளவில்லை . ஆனால் அந்த குடும்பத்தாருடன் சேர்ந்து சதிதிட்டம் தீட்டி முதல்வராக வருவதை அம்மாவின் ஆன்மா ஏற்றுகொள்ளாது என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் அவர் அளித்த பேட்டி:

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை கழகத்தில் ஒன்றுகூடி திருமதி சசிகலா அம்மையார் அவர்களை சட்டமன்ற குழு தலைவராக் தேர்ந்துடுத்துள்ளார்கள்.அதை தொடர்ந்து முதலமைச்சராக இருந்த்  ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ததாக கவர்னருக்கு கடிதம் கொடுத்துள்ளார்.

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி 19/11/2011 அன்று அவரோடு சேர்ந்து அவரது குடும்பத்தினர் அனைவரையும் கழகத்திலிருந்தும் வீட்டிலிருந்தும் வெளியேற்றுகிறார்.

அம்மாவுடன் வீட்டிலிருந்து பணியாற்றிய சசிகலாவும் இதே காரணத்தினால் வெளியேற்றப்பட்டார். அன்று என்ன காரணத்துக்காக வெளியேற்றப்பட்டார் என்பதை அவர் கொடுத்த மன்னிப்பு கடிதத்திலேயே உள்ளது.

 என்னை பொறுத்த வரையில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ , கட்சியில்பெரிய பொறுப்பில் வர வேண்டும் என்றோ , எம்.எல்.ஏ ,எம்பி ஆக வேண்டும் என்றோ , அரசு பதவியில் வர வேண்டும் என்றோ , பொது வாழ்வில் பங்கேற்க வேண்டு என்ற எண்ணம் துளியும் இல்லை.

அக்காவிற்கு உண்மையான அதாவது அம்மா அவர்களுக்கு. உண்மையான தங்கையாக இருக்கவே விரும்புகிறேன். என் வாழ்க்கைகயைஅ அக்காவிற்கு அர்பணித்துவிட்டேன். இனி வரும் காலங்களில் அக்காவுக்கு பணிவிடை செய்து வாழ வேண்டும் என்பதை தீர்மானித்து விட்டேன் அக்காவுக்கு உதவியாக இருக்கவே விரும்புகிறேன், என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மன்னிப்பு கடிதம் கொடுத்ததில் வெளியேற்றிய காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். இவரும் இவரது குடும்ப்த்தாரும் ஆட்சியில் அதிகாரத்தில் தலையிட்டதால் அவர்களை வெளியேற்றியுள்ளார். அதன் அடிப்படையில் தான் நான் இந்த தக்வரை நான் இதற்கு ஆசைப்பட மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்து உண்மை வந்துள்ளார்.

அப்படி வாக்குறுதி கொடுத்து உள்ளே வந்தவர் டிச.5 மறைகிறார். பிப்.5 லே புரட்சித்தலைப்வி அம்மா அவர்கள் என்ன பதவி வகித்து தொண்டு செய்தாரோ அந்த பதவியில் அமரவைக்க எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்கிறார்கள்.

இவர் உண்மையாகவே நீண்ட காலமாகவே அம்மாவின் இல்லத்தில், வேலை செய்கிறேன் என்ற போர்வையில் இவரும் , நடராஜனும் எப்படியாவது அம்மாவின் பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டம் தீட்டி வந்திருக்கிறார்கள் எனபது நன்றாக புலப்படுகிறது.

அம்மாவிற்கு இவரும் இவர் குடும்பமும் மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வீட்டில் கட்சியிலே கூட வேலை செய்யவே அழைத்துள்ளார். அம்மா அதற்கு  அதே பொருளில் பதிலளித்துள்ளார்.

சசிகலா ஒரு கடிதம் அளித்துள்ளார். விளக்கத்தை ஏற்றுகொள்கிறேன் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விலக்கப்படுகிறது. அதே சமயத்தில் நடராஜன் , திவாகரன் , தினகரன், மகாதேவன்,சுதாகரன் , பாஸ்கரன்,  ராவணன் ,கலிய பெருமாள்  , டாக்டர் வெங்கடேஷ் , ராமசந்திரன் ,அடையாறு மோகன், தங்கமணி , பழனிவேல் , சுந்தரவதனம், சந்தானலட்சுமி , வைஜெயந்தி மாலா, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை அப்படியே தொடரும் என்று அறிக்கை அளித்தார்.

ஆக இந்த குடும்பத்தை வெளியேற்றிய பிறகு தனக்கு உதவியாக இருப்பார் என்று சசிகலாவை மட்டும் அழைத்துள்ளார். மன்னிக்கும் மனித நேயத்த்கோடு அம்மா அழைத்துள்ளார். அப்படி அழைத்த பின்னர் அவர் மறைவுக்கு பின்னர் தாங்கள் என்ன நினைத்தார்களோ அதை தற்போது நிறைவேற்றியுள்ளார்கள்.

ஒன்றை சொல்ல விரும்புகிறேன் அம்மா ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால் நீங்கள் பிரயாசித்தம் தேட வேண்டும் அப்படி தேட நேற்று தேர்ந்தெடுத்த பதவியை துறக்க வேண்டும். அப்படி வந்தால் தான் அக்காவுக்காகவே வாழ்கிறேன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இருக்கும்.

அப்படி செய்யாவிட்டால் புரட்சித்தலைவி அம்மா ஒதுக்கிய துரோக  கூட்டத்துடன் சேர்ந்து துரோகம் செய்துள்ளீர்கள் என்று குற்றம் சாட்டுகிறேன். அப்படி வெளியேறாவிட்டால் அம்மா வாழ்ந்த வீட்டில் வசிக்க உங்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக அந்த இல்லத்தை விட்டு வெளியேற வேண்டும்.

இவ்வாறு அவர் சசிகலாவுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மு.க.ஸ்டாலினிடம் உருதுபேசச் சொல்லி கேட்பீர்களா..? காஷ்மீர் Ex முதல்வர் மெஹபூபா முப்தி ஆத்திரம்..!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!