கோவை தேர்தல் 'ட்விஸ்ட்..' புதிய தேர்தல் அதிகாரி நியமிப்பு.. இதுதான் காரணமா..?

By Raghupati RFirst Published Feb 19, 2022, 7:10 AM IST
Highlights

கோவை தேர்தல் சிறப்பு பார்வையாளராக, ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கோவை மவ்வட்டதை கலவர பூமியாக்க திமுக திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த தேர்தலை நேர்மையாக நடத்த துணை இராணுவத்தை கொண்டு வரவேண்டும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள், இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், தற்போது கோவை மாவட்ட சிறப்பு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு தேர்தல் சிறப்பு பார்வையாளராக, நில நிர்வாக ஆணையராக இருக்கிற நாகராஜன் நியமிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், கோவை மாநகரை பொருத்தவரை 2,723 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 125 பேர் அடங்கிய 3 சிறப்பு காவல் படையும், 58 அதிரடிப்படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

click me!