Kovai Local Body Election Result: கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி தோல்வி.

By Ezhilarasan BabuFirst Published Feb 22, 2022, 12:09 PM IST
Highlights

காங்கிரஸ் 2, சிபிஎம் 1  இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதேபோல அதிமுக தனது வெற்றிக் கணக்கை அங்கு தூங்கவில்லை என்றாலும் தொண்டாமுத்தூரில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சி 7 வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜன் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு வரும் அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாளினி கார்த்திகேயன் தோல்வி அடைந்தார். 

கோவை மாநகராட்சியில் அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி கார்த்திகேயன் திமுக  வேட்பாளரிடம் மண்ணைக் கவ்வி யுள்ளார். இது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ள நிலையில்  இது அவருக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.

கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டையாக இருந்து வரும் நிலையில் தற்போது அந்த மாநகராட்சியில் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி தோல்வியை சந்தித்துள்ளார். இது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றாலும் கோவையைப் பொருத்தவரையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக படுதோல்வியடைந்தது. இதனால் கோவை என்பது அதிமுகவின் கோட்டை ஆகவே இருந்து வருகிறது. அங்குள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக எம்எல்ஏக்கள் வசமுள்ளது. ஒரு தொகுதி பாஜக வசம் உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி கொங்கு மண்டலத்தில் இமாலய வெற்றியை அறுவடை செய்த நிலையில், கடந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுகவின் மொத்த கவனமும் கோவை மீது திரும்பியது.

இதனால் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த முறை கோவையை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமித்தார் ஸ்டாலின். கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றாமல் ஓயமாட்டேன் என சபமேற்று சுற்றிச் சுழன்று வந்தார் செந்தில் பாலாஜி, எஸ்.பி வேலுமணி கோவையின் அசைக்கமுடியாத தளபதியாக இருந்து வரும் நிலையில் அவரை எதிர்த்து களமாடி வந்தார் செந்தில்பாலாஜி,  பொருளாதார ரீதியாகவும், மக்கள் செல்வாக்கு ரீதியாகவும் செந்தில் பாலாஜி வேலுமணிக்கு டப் கொடுத்து வந்தார்.  இதனால் கோவை மாநகராட்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிறப்பாக செயல்பட்டு வந்தன. கோவையில் மொத்தம் 100 வார்டுகள் உள்ள நிலையில் இதுவரை திமுக 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

காங்கிரஸ் 2, சிபிஎம் 1  இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதேபோல அதிமுக தனது வெற்றிக் கணக்கை அங்கு தூங்கவில்லை என்றாலும் தொண்டாமுத்தூரில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சி 7 வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜன் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு வரும் அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாளினி கார்த்திகேயன் தோல்வி அடைந்தார். எஸ்.பி வேலுமணியின் ஆதரவாளர் சந்திரசேகரின் மனைவி ஷர்மிளாவுக்கு போட்டியாக மேயர் வேட்பாளராக அறியப்பட்டவர்தான் கிருபாலினி கார்த்திகேயன், இவரது கணவர் கார்த்திகேயன் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகியாக இருந்து வருகிறார், வடவள்ளி சந்திரசேகரனும் சரி கார்த்திகேயனும் சரி இருவருமே முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தீவிர ஆதரவாளர்கள் ஆவர்.  இந்நிலையில் கிருபாலினி அதிக அளவில் பணத்தை செலவழித்து வந்த நிலையில்,  நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.  
 

click me!