
தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ. க்களின் பதவியை பறிக்க அரசுக் கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
19 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்க அரசு கொறடா பரிந்துரை செய்யப் போவதாகக கூறியுள்ளார். இவரின் பரிந்துரையை ஏற்று, சபாநாயகர் நடவடிக்கை எடுப்பாரா என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது
தற்போது புதுவையில் உள்ள விண்ட்பிளவர் ரிசார்ட்டில் , டிடிவி தினகரன் ஆதரவு எம்எல் ஏக்கள் 19 பேரும் தங்கியுள்ளனர்.இந்நிலையில் அரசு கொறடாவின் இந்த பரிந்துரை நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு கொறடாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்கும் கட்டாயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு கொறடாவின் அனுமதியின்றி , நேரடியாக ஆளுநருக்கு கடிதம் கொடுத்து முதல்வருக்கு அளிக்கப்பட்ட ஆதரவினை வாபஸ் பெறுவதாக தன்னிச்சையாக அறிவித்ததால், அரசு கொறடா நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது