டிடிவி எம்.எல்.ஏக்களை விசாரிக்க கலெக்டர் உத்தரவு... - மிரளும் சசி கும்பல்...!!!

 
Published : Aug 24, 2017, 03:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
டிடிவி எம்.எல்.ஏக்களை விசாரிக்க கலெக்டர் உத்தரவு... - மிரளும் சசி கும்பல்...!!!

சுருக்கம்

Former MLA Omshakthi Shakthi Collector Satyendra Singh Thurassava complained that the MLAs had been locked up by the senior SP Rajiv Ranjan MLA.

எம்எல்ஏக்களை அடைத்து வைத்துள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் கலெக்டர் சத்தியேந்திர சிங் துர்சாவத்திடம் கொடுத்த புகார் அடிப்படையில் சீனியர் எஸ்பி ராஜீவ் ரஞ்சன் எம்.எல்.ஏக்களை விசாரணை நடத்தி வருகிறார். 

நீண்ட நாள் இழுப்பறிக்கு பிறகு அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்துள்ளது. ஆனால் ஏற்கனவே ஒன்றி இருந்த டிடிவியையும் சசிகலாவையும் எடப்பாடி நீக்கியதாலேயே இந்த இணைப்பு சாத்தியமாகியுள்ளது. 

இதனால் முருகன் கோபித்து கொண்டு பழனிக்கு சென்றது போல் ஆத்திரமடைந்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கு சென்று விட்டனர். 

ஆனால் எடப்பாடி ஒபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் டிடிவி எம்.எல்.ஏக்க்ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனிடையே திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தினகரன் ஆதரவாளர்கள் 25 பேர் மீது போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காரணம், குடவாசல் அதிமுக நகர செயலர் சாமிநாதனை தாக்கியதாக 25 பேர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், எம்எல்ஏக்களை அடைத்து வைத்துள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் கலெக்டர் சத்தியேந்திர சிங் துர்சாவத்திடம் புகார் மனு அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில், சீனியர் எஸ்பி ராஜீவ் ரஞ்சன் எம்.எல்.ஏக்களை விசாரணை நடத்தி வருகிறார். யாராவது உங்களை சிறை வைத்துள்ளார்களா? அல்லது விருப்பத்தின் பேரிலே தங்கியுள்ளீர்களா? என  எம்.எல்.ஏக்களிடம் கேட்டு வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!