
கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் உள்ள “கோல்டன் பே ரிசார்ட்” எனும் கடற்கரை சொகுசு ஓட்டலில் 115 எம்.எல்.ஏக்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அப்படி செல்போன் பேசினால் ஸ்பீக்கரில் தான் பேச வேண்டும் என கடுமையான கட்டுபாடுகள் விதித்து மன உளைச்சலை உருவாக்கி உள்ளனர் சசிகலா தரப்பினர்.
இதனால் மனம் வெருத்து போன 12 எம்.எல்.ஏக்கள் விடுதலை செய்ய வேண்டும் என காலையில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரையும் உடனே வெளியேற்ற வேண்டும் என கூவத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.