கொங்கு நாடு என்பது மக்கள் முடிவு செய்ய வேண்டிய ஒன்று.. மத்திய அமைச்சர் எல். முருகன் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 16, 2021, 3:57 PM IST
Highlights

அமைச்சராக பொறுப்பேற்ற பின் மக்களை சந்திக்க தமிழகத்தில் யாத்திரை செல்கிறேன், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றியே யாத்திரை மேற்கொள்கிறோம். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்து கூட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை என்றார், 

கொங்குநாடு என்பது மக்கள் முடிவு செய்யவேண்டிய ஒன்று என்றும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது நீண்ட காலமாக பல கோவில்களில் இருந்து வருகிறது எனவும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் திமுக அரசு கோவில்களில் ஓதுவார், அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், 16 ஆம் தேதி (இன்று) முதல் யாத்திரை மேற்கொள்ளபோவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதாவது, மேற்கண்ட மாவட்டங்களில் பயணித்து அவரின் பெற்றோர்களிடம் சென்று அவர் ஆசி வாங்க உள்ளதாகவும், அதே நேரத்தில் மக்களுக்கும்- அமைச்சர்களுக்கும் இடைவெளி இன்றி மக்களோடு மக்களாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவும் வகையில் இந்த யாத்திரையை அவர் மேற்கொள்வதாக முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், திட்டமிட்டபடி, கோவையில் மக்கள் ஆசீர்வாத யாத்திரையை அவர் இன்று துவங்கினார். அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, 

அமைச்சராக பொறுப்பேற்ற பின் மக்களை சந்திக்க தமிழகத்தில் யாத்திரை செல்கிறேன், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றியே யாத்திரை மேற்கொள்கிறோம். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்து கூட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை என்றார், கொங்கு நாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கொங்குநாடு என்பது மக்கள் முடிவு செய்ய வேண்டிய ஒன்று, நாடு முழுதும் மக்களை சந்திக்கும் வகையில் ஆசீர்வாத யாத்திரை நடைபெறுகிறது என்றார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது, புதிய விஷயமல்ல, ஏற்கனவே பல கோவில்களில் பல்வேறு சாதியினர் அர்ச்சகராக இருந்து வருகின்றனர். இது குறித்து நான் தமிழக மாநில தலைவராக இருந்தபோதே உங்களிடம் புள்ளி விவரத்துடன் கூறியிருக்கிறேன் என்ற அவர், சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை இருக்கும் என்றும் கூறினார். 

 

click me!