உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை... அண்ணாமலையின் விமர்சனத்திற்கு கே.என்.நேரு பதிலடி!!

By Narendran S  |  First Published Oct 18, 2022, 5:00 PM IST

உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் முதல்வருக்கு அவசியம் இல்லை என்று அண்ணாமலையின் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். 


உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் முதல்வருக்கு அவசியம் இல்லை என்று அண்ணாமலையின் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். இதுக்குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி களும், விடுதலை சிறுத்தை களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என அனைவருமே தலைவரை (மு.க.ஸ்டாலின்) பாராட்டுகின்றனர். அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய சிறப்பு. 15வது பொது தேர்தல் கலைஞரை காட்டிலும் மிகச் சிறப்பாக இந்த தேர்தல் நமது தலைவர் நம் நாட்டு முதலமைச்சர் நடத்தி முடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: பள்ளிகளில் மானிய விலையில் பால் பொருட்கள் வழங்க நடவடிக்கை சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் பதில்!

Tap to resize

Latest Videos

அனைத்து தோழர்களையும் அரவணைத்து இந்த கழகத் தேர்தலை முடித்து இரண்டாவது முறையாக அவர் தலைவராக வந்திருக்கிறார். நிச்சயமாக அவர் இருக்கிற வரை அவர் தான் தான் தலைவராக இருப்பார். அது தான் சரி. மீண்டும் பலமுறை தலைவராக வந்து தமிழ் மக்களுக்கு நல்ல வழி காட்டுவார் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கழகத்தை வழி நடத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கலைஞர் அவர்கள் 50 ஆண்டு காலம் வழி நடத்தினார். ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்துகிறார் மறு பக்கம் தமிழ்நாட்டு முதலமைச்சராக வழி நடத்துகிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஏழு வாக்குறுதிகளை தந்துள்ளார், அதனை நோக்கி ஆட்சி நடத்துகிறார்.

இதையும் படிங்க: நன்னெறி கல்வி இல்லாதது தான் இதுப்போன்ற பிரச்சனைக்கு காரணம்.. உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரபரப்பு கருத்து

பள்ளிகள்விக்கு 34 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கி உள்ளார், மருத்துவத்திற்கு என பல துறைக்கு அவர் வாக்குறுதி மட்டுமில்லாமல் அதற்கான நிதியும் ஒதுக்கி உள்ளார். எங்களை கேடி என்று அண்ணாமலை சொல்கிறார். அதை ஒரு நல்ல மனிதர் சொன்னால் பரவாயில்லை, எங்கள் முதலமைச்சர் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் செயலில் செய்பவர். அவரை ராசி இல்லாத வர்கள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இன்று சட்டசபைக்கு வர முடியாத அளவிற்கு ராசிக் காரர்களாக உள்ளார்கள். ஒன்றை ஆண்டு காலம் சிறப்பாக பணியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டு முதலமைச்சர். திமுக சாயம் வெளுக்காது என்று தெரிவித்தார். 

click me!